நாட்டில் தற்பொழுது நிலவும் சூழ்நிலையின்படி, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராபக்ஸவின் பாதுகாப்பு பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. முதலாவது பொதுக் கூட்டத்திலேயே அதனை நாம் கண்டோம். இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கணிப்பீடொன்றை செய்து தேவையான பாதுகாப்பை வழங்கும் என தாம் எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கேட்டுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஸ என்பவர் பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த முக்கிய நபர் என்பதை யாரும் அறிவர். இதனால், இவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி வேட்பாளர் என்பதனால் மாத்திரம் அல்ல என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். இது குறித்து பொதுஜன பெரமுன பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கெஹெலிய எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.

