Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் பேரணி!

August 17, 2019
in News, Politics, World
0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் கே.ஜெகவண்ணன் தலைமையில் இன்று பிற்பகல் இந்த பொதுமக்கள் எழுச்சிப் பேரணி இடம்பெற்றது.

கல்லடி மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பமான இப்பேரணி கல்லடி பாலத்தினூடாக கிழக்குப் பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு முன்னால் உள்ள சுற்றுவட்டம் வரை சென்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்குச் சென்றது.

இப்பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்கள், சமூக சேவையாளரும் தமக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீட்டுத் திட்டங்களைப் பெற்றுத்தந்த மக்கள் விரும்பும் தலைவரான சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைமை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

சஜித் பிரேமதாசவின் படம் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கட்சியின் அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், இளைஞர் அணியின் உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

Previous Post

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாரிய தீ விபத்து!

Next Post

இலகுவகை ரயில் சேவை ஆரம்பம் !!

Next Post

இலகுவகை ரயில் சேவை ஆரம்பம் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures