டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே இன்று மாலை இந்த தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய நிதி அமைச்சர் உட்பட பலர் சிகிச்சை பெற்றுவரும் குறித்த மருத்துவமனையின் முதல் மற்றும் இரண்டாவது தளம் முழுவதும் தீ வேகமாக பரவியது.
மருத்துவமனையின் அவசர பிரிவு விடுதிக்கு அருகிலேயே தீ ஏற்பட்டுள்ளதுடன் அருகிலுள்ள விடுதி நோயாளர்களும் வேறு பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் பிரிவின் 22 வீரர்கள் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீவிபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

