ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் 5.1 ரிக்டர் அளவில் நேற்று(வெள்ளிக்கிழமை) இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, அண்மைக்காலமாக இந்தோனேசியா, அமெரிக்கா மற்றும் ஐப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

