Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போன்று உருவாக்கப்பட்ட கார்

August 17, 2019
in News, Politics, World
0

ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வருவது போன்று, பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அஸ்டன் மார்டின் நிறுவனம் உருவாக்கிய கார் சுமார் 45 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. 1960களில் வெளியான ‘கோல்ட் பிங்கர்’, ‘தண்டர் பால்’ போன்ற ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில், எதிரிகளை துரத்த ஜேம்ஸ் பாண்ட் பல்வேறு நவீன சிறப்பு அம்சங்கள் கொண்ட காரினை பயன்படுத்தி இருந்தார்.

‘007’ என்ற பதிவெண் கொண்ட அந்த காரில், எதிரிகளின் துப்பாக்கி குண்டு தாக்காமல் இருக்க ‘புல்லட் ப்ரூப்’ கண்ணாடி, முன்பக்க விளக்குகளிலிருந்து வெளியே வரும் துப்பாக்கி உள்ளிட்ட 13 பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டிருந்தன.

இந்த கார் மிகவும் பிரபலமானதை அடுத்து, இதேபோன்ற காரை அஸ்டன் மார்டின் நிறுவனம் உருவாக்கியது. மிகவும் பழமையான இந்த கார் நேற்று கலிபோர்னியாவில் ஏலம் விடப்பட்டது.

இதனை வாங்க பலர் போட்டி போட்ட நிலையில், இறுதியாக கார் 45 கோடியே 60 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதனை ஏலம் விட்ட ஆர்எம் சோத்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.

Previous Post

சிறிய ரக ஜெட் விமானம் தரையிறங்கிய போது தீ

Next Post

அரண்மனையின் பின்புறம் ஜொலித்த முழு நிலாவின் காட்சி

Next Post

அரண்மனையின் பின்புறம் ஜொலித்த முழு நிலாவின் காட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures