Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்

July 8, 2019
in News, Politics, World
0

குற்றங்களை சுமந்தி, கோட்டாபய ராஜபக்ஷவை சிறையில் அடைத்தாலும் அவர்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளர் என்று எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

நுகேகொடயில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். உதயகம்மன்பில மேலும் கூறியுள்ளதாவது,

“ஜனாதிபதித் தேர்தல் எப்போது என்ற குழப்பம் தற்போது ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ளது.

அரசமைப்பின் 30 இன் கீழ் 2 ஆம் சரத்திற்கு இணங்க, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கொன்றின்போது, ஐவரடங்கிய நீதிபதிகள் குழாமொன்றினால் இதுதொடர்பில் தீர்ப்பொன்றும் வழங்கப்பட்டது.

அதாவது, ஜனாதிபதியின் பதவிக்காலம் அவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்ட தினத்திலிருந்து ஆரம்பிக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

அதற்கிணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதியன்றே நிறைவடைகிறது.

எனவே, அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் திகதிக்கும், டிசம்பர் 9 ஆம் திகதிக்கும் இடையில் நடைபெற்றாக வேண்டும்.

அதேநேரம், அரசமைப்புக்கு இணங்க, 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அறிவித்தல் விடுத்தே ஆக வேண்டும்.

19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு 2015, மே மாதம் 15 ஆம் திகதியன்றே சபாநாயகர் கைச்சாத்திட்டார்.

அதற்கிணங்க பார்க்கும்போது ஜனாதிபதியின் பதவிக்காலம் 2015 மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகி, 2020 மே, 15 ஆம் திகதியுடன் நிறைவடைகிறது என்ற தர்க்கத்திற்கு இணங்கவே, உயர்நீதிமன்றில் தற்போது வழக்குத் தொடரப்பட்டவுள்ளது.

ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டம் கைச்சாத்திடப்பட்ட நாளில் இருந்துதான் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆரம்பமாகின்றது என்று 19 ஆவது திருத்தச்சட்டத்தின் எந்தவொரு சரத்திலும் கூறப்படவில்லை என்பதை நான் இங்கு தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.

எனவே, உரிய நேரத்தில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற்றே ஆகவேண்டும்.

எமது தரப்பில் கோட்டாபயராஜபக்ஷ தான் வேட்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.அவரும் அதற்கு ஆயத்தமாகிவிட்டார்.

அமெரிக்க குரியுரிமை விவகார பிரச்சினையும் முழுவதுமாக தீர்க்கப்பட்டு விட்டது.

அத்தோடு, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளின் பிரகாரம் அவர் சிறைக்குச் சென்றாலும், அவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர் என்பதை நான் உறுதியுடன் கூறிக்கொள்கிறேன்.

உண்மையில், சிறைச்சாலையில் இருந்துக்கொண்டு வாக்குக் கேட்டால் இலகுவில் வெற்றியடையலாம்” என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

Previous Post

நில உறுதிப் பத்திரம் வழங்குவதனை யாராலும் தடுக்க முடியாது

Next Post

மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!

Next Post

மீண்டும் குண்டுத்தாக்குதல் நடத்தப்படும் அபாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

சட்டவிரோத மதுபான வர்த்தகம் தொடர்பான 10 குற்றச்சாட்டுகளைக் கொண்ட பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கைது

July 5, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம்: 2 கைதிகள் உயிரிழப்பு; 30-க்கும் மேற்பட்டோர் காயம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures