Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தீவிரவாதிகளின் உடல்களை பொறுப்பேற்கமாட்டோம் – சாய்ந்தமருது பள்ளிவாசல்

April 27, 2019
in News, Politics, World
0

சாய்ந்தமருது நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்களை தமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அவர்களை அப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம் எனவும் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் மக்களுடன் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையின் முழு வடிவம்

சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் என்பன மக்களுடன் இணைந்து வெளியிடும் ஊடக அறிக்கை

நேற்று 26.04.2019 வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக மக்களுக்கும், நாட்டிற்கும் விழிப்பூட்டும் வகையில் இவ்வூடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.

நேற்று பிற்பகல் 6.15 மணியளவில் சாய்ந்தமருது வொலிவோரியன் கிராமத்தின் பீஃ183 வது இலக்க வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சாய்ந்தமருது அல்லாத வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் செயற்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, குறித்த பள்ளி நிருவாகத்தினரும், அப்பிரதேச கிராம சேவை உத்தியோகத்தரும், சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தின் உறுப்பினர்களும், அப்பிரதேச வாசிகளும் இணைந்து விசாரணை நடாத்தி பொலிசாருக்கும் உடனடி தகவல் வழங்கினர்.

அதன் பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாரும், குறித்த குழுவினரும் பொதுமக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளிலும்,பயங்கரவாதிகள் தப்பிக்க முடியாதவாறு பாதைகளை மறித்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் ஸ்தலத்திற்கு விரைந்த படையினர் தங்களது உயிரைப் பணயம் வைத்து, தீவிரவாதிகளுடன் போராடி நிலமையை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு இப்பிரதேசத்தில் என்றுமில்லாதவாறு அமைதியின்மையை ஏற்படுத்தி எம்மை மிகுந்த கவலைக்குள் ஆழ்த்தியிருக்கும் இப்பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு மரணித்த எவரது உடல்களையும் எமது பள்ளிவாசல் பொறுப்பேற்காது என்பதுடன், அவர்களை இப்பிரதேச மையவாடிகளில் அடக்கம் செய்யவும் இடமளிக்கமாட்டோம்.

ஸியாரம் அமைந்துள்ள பள்ளிவாசல்களை இலக்கு வைத்து விசமிகளின் தாக்குதல் நடைபெறலாம் என பொலிசார் எம்மை எச்சரித்ததற்கு அமைய, நாம் ஸியாரம் அமைந்துள்ள எமது பள்ளிவாசல்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகளை முடுக்கியிருந்தோம். இக்கொடிய காட்டு மிராண்டிகள் எமது பள்ளிகளை இலக்கு வைத்திருப்பார்களாயின் அது பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழக்க நேரிடலாம். அல்லாஹ் இப்பிரதேசத்திற்கு ஏற்படவிருந்த பெரும் அபாயத்திலிருந்து எம்மைப் பாதுகாத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்!

தங்களது உயிரைப் பணயம் வைத்து, சந்தேகத்திற்கிடமான நபர்களை சென்று விசாரித்து, பொலிசாருக்கு தகவல் வழங்கி ஒரு பேரழிவிலிருந்து இப்பிரதேசத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்ட எமதூரின் துணிச்சலான அந்த சகோதரர்களையும், எமது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் உடன் நடவடிக்கை மேற்கொண்ட இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு முப்படையினரையும் மனம் நெகிழ்ந்து நன்றி கூறுகின்றோம். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்டு தமது உறவுகளையும், சொத்துக்களையும் இழந்து மீள் குடியேறியுள்ள இம்மக்களை மீண்டும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் இக்கயவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!

இச்சந்தர்ப்பத்தில் மக்களை அமைதி காக்குமாறும், தொழுகைகளிலும், பிராத்தனைகளிலும் ஈடுபடுமாறும், பாதுகாப்பு தரப்பின் அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இப்பிரதேச மக்களை அன்பாக வேண்டுகின்றோம். எனவும் தமது ஊடக அறிக்கையில் விடப்பட்டது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனிபா, ஜம்மிய்யத்துல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷேஹ் எம்.எம். சலீம் சர்க்கி, வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

ஜெட் ஏர்வேஸ் மூத்த ஊழியர் மகாராஷ்டிராவில் தற்கொலை

Next Post

மனைவியை அச்சுறுத்தி விட்டு, மீண்டும் தலைமறைவாகிய பிரதான சந்தேக நபர்

Next Post

மனைவியை அச்சுறுத்தி விட்டு, மீண்டும் தலைமறைவாகிய பிரதான சந்தேக நபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures