Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கர்ழாவியுடன் இருப்பது பயங்கரவாதி ஸஹ்ரான் அல்ல

April 27, 2019
in News, Politics, World
0

சவூதிக்கு சார்பான இரு இலத்திரனியல் ஊடகங்கள், கலாநிதி யூசுப் அல்கர்ழாவியும் இன்னும் இருவரும் காணப்படக் கூடிய புகைப் படப்பிரதி ஒன்றை வெளியிட்டு, அதில் இருக்கின்ற இருவரில் ஒருவர் இலங்கை குண்டு வெடிப்பில் தலைமை தாங்கிய ஸஹ்ரான் ஹாஷிம் என வெளியிட்டுள்ள தகவல் பொய்யானது என சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் அறிவித்துள்ளது.

சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியம் இந்தத் தகவல் பொய்யானது என உறுதிப்படுத்தியுள்ளதுடன் பொய்யான தகவலைப் பரப்பிய ‘அல்அரபிய்யா’, ‘பஸ் அல்அரபி’ ஆகிய ஊடகங்களைக் கண்டித்துள்ளதுடன் அவற்றின் செயலை ‘ஊடகக் குற்றச் செயல்’ எனவும் வர்ணித்துள்ளது.

குறித்த போட்டோ பற்றி அல்ஜஸீரா செய்தி ஊடகம் தெளிவுபடுத்துகையில் அது, 2016ல் எடுக்கப்பட்டது என்றும், அதில் அல்லாமா கர்ழாவியின் வலப்புரத்தில் இருப்பவர் அறிஞர் ஸல்மான் நத்வி என்றும் இடப்புரம் இருப்பவர் கலாநிதி ஆதில் ஹராதி என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய இஸ்லாமிய அழைப்பாளரான ஸல்மான் நத்வியையே மேற்படி இரு ஊடகங்களும் ஸஹ்ரான் ஹாஷிம் என அரபுலகில் பிழையான தகவலைப் பரப்ப முயற்சித்துள்ளன. கடந்த 2017 இல் சஊதி அரசு கடாருடனான சகல உறவுகளையும் துண்டித்துக் கொண்ட போது, கஃபதுல்லாவின் இமாம் சுதைஸி மேற்படி சஊதியின் நடவடிக்கையினை சரிகண்டு சஊதி மன்னன் மற்றும் அவரது மகன் முஹம்மத் பின் சல்மான் ஆகிய இருவருக்காகவும் பிரார்த்தனையும் செய்தார்.

அதற்காக சல்மான் நத்வி, சுதைசியைக் கண்டித்து அரபியில் எழுதிய கடிதம் ஏனைய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு சமூகவலைத் தளங்களில் வைரலாகப் பரவியது.

கலாநிதி அல்லாமா யூசுப் அல்கர்ழாவியையும் அவர் வாழும் கடார் நாட்டையும் பயங்கர வாதத்துடன் தொடர்பு படுத்துவதற்காக சஊதி, டுபாய், எகிப்து ஆகிய நாடுகள் தீவிர முயற்சியகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒன்றாக சஊதியின் பிரபல இலத்திரனியல் பத்திரிகையான ‘உக்கால்’ இன்று வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில் கட்டாரை பயங்கர வாதிகளின் கோட்டை என வர்ணித்துள்ளது.

கலாநிதி யூசுப் அலகர்ழாவி நடுநிலைத் தன்மையை வலியுறுத்தி தீவிரவாத, பயங்கரவாத சிந்தனைத் தாக்கங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அடிப்படை வாத, தீவிரவாத, பயங்கரவாத அமைப்புக்களும், அமெரிக்க ஆதரவு முஸ்லிம் நாடுகளும் அவரைப் பயங்கர வாதியாகக் காட்ட முயற்சிக்கின்றமை புதிராகவே இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Previous Post

இன்றும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்

Next Post

சில மத்ரஸாக்கள் அடிப்படைவாதத்தைப் போதிக்கின்றன- சந்திரிக்கா

Next Post

சில மத்ரஸாக்கள் அடிப்படைவாதத்தைப் போதிக்கின்றன- சந்திரிக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

செம்மணி அச்சத்தில் பின்வாங்கும் அநுர அரசாங்கம்! சிறீதரன் குற்றச்சாட்டு

July 1, 2026
நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

நடிகர் பாரத் நடிக்கும் ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் அறிமுக பாடல் வெளியீடு

July 1, 2026
கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

கடைசி நேரத்தில் மாற்றுவீரர் மார்ட்டினெலி போட்ட கோல் ஜப்பானை வீழ்த்த பிரேஸிலுக்கு உதவியது

June 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures