சாலையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவர் மீது விமானம் விழுந்து நொறுங்கியதில், இரண்டு பெண்களின் வாழ்வு பாதிக்கப்பட்டதோடு அவர்களது பிள்ளைகளின் எதிர்காலமும் சிக்கலுக்குள்ளாகவிருந்தது.
பிரித்தானியாவின் சஸ்ஸெக்சைச் சேர்ந்த Daniele Polito (23) தனது நண்பர் ஒருவருடன் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, இன்னொருபுறம் விமானத்தில் சாகச நிகழ்வு ஒன்றை நடத்திக் கொண்டிருந்த Andrew Hill என்பவரின் விமானம் வெடித்துச் சிதறி சாலையில் விழுந்தது.
அதில் Danieleம் அவரது நண்பரும் உயிரிழந்தனர். Daniele, ஜார்ஜினா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார். ஜார்ஜினா கர்ப்பமாக இருந்தார்
ஆனால் Danieleஇன் இறுதிச்சடங்கின்போதுதான் தனது குழந்தை அவரது முதல் குழந்தை அல்ல என்பது ஜார்ஜினாவுக்கு தெரியவந்தது.
காரணம் ஜார்ஜினாவுடன் பழகுவதற்குமுன் Daniele, டான்யா என்ற பெண்ணுடன் சேர்ந்து நான்காண்டுகள் வாழ்ந்திருந்த நிலையில், பின்னர் அவரைப் பிரிந்திருந்தார். இருவருக்கும் ஜார்ஜியா என்ற மகனும் இருந்தான்.
இது தெரியவந்தபின்னர், குழந்தை பிறந்து இரண்டாண்டுகள் ஆன நிலையில், தயங்கியவாறு, ஜாக்ஸன் என்று பெயரிடப்பட்ட தனது மகனுடன் டான்யாவை சென்று சந்தித்தித்து தான் யார் ஜாக்ஸன் யார் என்பதையெல்லாம் டான்யாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் விளக்கியிருக்கிறார் ஜார்ஜினா
முரட்டுப்பையனாக வளர்ந்திருந்த ஜார்ஜியா, ஜாக்ஸன் யார் என்று தெரியவந்ததும், அவனை அணைத்துக் கொண்டு, ஓ! ஐ லவ் ஹிம் என்று சொல்ல, இருவரும் உடனே நண்பர்களாகி விட்டனர்.
பிள்ளைகளின் மாற்றம் கண்டு ஆச்சரியப்பட்ட அம்மாக்களும் இப்போது நண்பர்களாகிவிட, நால்வரும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்

