ஹற்றன் மஸ்கெலியா பிரதான வீதியில் வளைவு பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டியை கண்டு ஒதுங்கிய நபர் ஒருவர் அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
அவர் டிக்கோயா கிளங்கன் பகுதியைச் சேர்ந்த டி.எம்.ரம்பண்டா வயது 59 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

