வவுனியா பண்டாரிகுளம் விபுலாநந்தா கல்லூரிக்கு அருகாமையில் வர்த்தக நிலையம் என்ற போர்வையில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த வர்த்தக நிலையத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போது 15 கிராம் 500 மில்லி கிராம் கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.
அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டிர் வர்த்தக நிலையத்தை நடத்தி வந்த 31 வயதான வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

