பொதுஜன பெரமுனவிலுள்ள பெரும்பாலானவர்கள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்ற கருத்தில் காணப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட இலாபத்துக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை விரும்புபவர்கள் மஹிந்த ராஜபக்ஷ தரப்பில் உள்ளனர். அந்த அணியிலுள்ள பலர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினால் பாதிக்கப்பட்டவர்களே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டாரவெல தொகுதியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

