Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேருந்­துக் கட்­ட­ணங்­க­ளைக் குறைப்­பது தொடர்­பில் இன்று பேச்சு

December 24, 2018
in News, Politics, World
0

எரி­பொ­ருள் விலை, பல தடவைகள் குறைக்­கப்­பட்ட நிலை­யில், பேருந்­துக் கட்­ட­ணங்­க­ளைக் குறைப்­பது தொடர்­பில், நிதி அமைச்­சில் இன்று திங்­கட்­கி­ழமை பேச்சு இடம்­பெ­ற­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது பற்­றிய பேச்­சுக்கு தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கங்­க­ளின் சம்­மே­ள­னத்­தி­னர் அங்கு அழைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
ஒரு லீற்­றர் டீச­லின் விலையை 5 ரூபா­வா­லும் ஒரு லீற்­றர் பெற்­றோ­லின் விலை 10 ரூபா­வா­லும் கடந்த வியா­ழக்­கி­ழமை நள்­ளி­ரவு தொடக்­கம் குறைக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்­னர் மூன்று சந்­தர்ப்­பங்­க­ளில் டீசல் விலை குறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. கடந்த மாதம் முத­லாம் திகதி டீசல் 7 ரூபா­வா­லும், கடந்த 15 ஆம் திகதி டீசல் விலை 5 ரூபா­வா­லும் குறைக்­கப்­பட்­டது. கடந்த மாதம் 30 ஆம் திகதி பெற்­றோல் விலை 5 ரூபா­வால் குறைக்­கப் பட்­டது. அவ்­வாறே டீசல் விலை­யும் குறைக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யி­லேயே பேருந்­துக் கட்­ட­ணத்­தைக் குறைப்­பது தொடர்­பில் இன்று திங்­கட்­கி­ழமை பேச்சு நடத்­தப்­ப­ட­வுள்­ளது. பேருந்­துக் கட்­ட­ணக் குறைப்­புக்­கான வீதம் தொடர்­பில் இணக்­கம் எட்­டப்­ப­ட­லாம் என்று தனி­யார் பேருந்து சங்­கங்­க­ளின் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­த­னர்.

இது­வரை டீச­லின் விலை 15 ரூபா­வால் குறைக்­கப்­பட்­டுள்­ளது. அதன் பிர­தி­ப­லனை, பய­ணி­க­ளுக்­குப் பெற்­றுக்­கொ­டுக்­கத் தயா­ரா­க­வுள்­ளோம் என்று சங்­கத்­தின் தலை­வர் கெமுனு விஜே­ரத்ன தெரி­வித்­துள்­ளார். அதன்­படி தனி­யார் பேருந்­துக் கட்­ட­ணத்தை 5 வீதத்­தால் குறைக்க முடி­யும் என்­பதை உறு­தி­யா­கக் கூற­மு­டி­யும் என்று தனி­யார் பேருந்து சங்­கங்­க­ளின் சம்­மே­ள­னச் செய­லா­ளர் அஞ்­சன பிரி­யஞ்­சித் தெரி­வித்­தார்.

Previous Post

மக­சின் சிறை­யில் ஹெரோய்­னு­டன் ஒரு­வர் கைது!!

Next Post

விபத்­தில் இளை­ஞர்­கள் இருவர் உயி­ரி­ழப்பு

Next Post

விபத்­தில் இளை­ஞர்­கள் இருவர் உயி­ரி­ழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures