மகசின் சிறைச்சாலையில் ஹெரோய்ன் போதைப் பொருள் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து 4 கிராம் 690 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் போதைப் பொருள் மீட்கப்பட்டது.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 32 வயதான அவர் ஏற்கனவே 4 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டிருந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொரளைப் பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 700 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதானவரே அங்கு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

