ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க சென்றவர்களுக்கு எந்தவித அமைச்சுப் பதவிகளையும் வழங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதில்லையென தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மூவர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று புதிய அமைச்சர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதும் இன்று புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.













