Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 வயது இந்தியச் சிறுவன் தொடங்கியுள்ள மென்பொருள் நிறுவனம்

December 17, 2018
in News, Politics, World
0

துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.”,
“துபையில் 13 வயது இந்தியச் சிறுவன் மென்பொருள் நிறுவனம் தொடங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சிறுவன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, செல்லிடப்பேசி செயலியை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளத்தைச் சேர்ந்த ஆதித்யன் ராஜேஷ் என்ற அந்தச் சிறுவன், 9 வயதிலேயே நிறுவனங்களுக்கு இணையதள பக்கத்தை வடிவமைப்பது, நிறுவனச் சின்னங்களை கணினியில் வடிவமைப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, முதல்முறையாக செல்லிடப்பேசி செயலி ஒன்றையும் உருவாக்கினார். இப்போது, 13 வயதாவிட்ட நிலையில் டிரினெட் சொல்யூஷன்ஸ் என்ற பெயரில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் .நான் கேரள மாநிலத்தில் பிறந்தேன். எனக்கு 5 வயதாக இருக்கும்போது எனது குடும்பம் துபைக்கு வந்துவிட்டது.

எனது தந்தை மூலம் எனக்கு இணையதளம், கணினி குறித்த அனுபவம் கிடைத்தது. இப்போது, எனது பள்ளி நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன். சட்டப்படி 18 வயது கடந்த பிறகுதான் என்னை நிறுவனத்தின் உரிமையாளராக அறிவித்துக் கொள்ள முடியும். இப்போது எங்களிடம் 12 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அவர்களுக்கு இலவசமாகவே சேவை அளித்து வருகிறோம். இது எங்களுக்கு சிறந்த பயிற்சியாக உள்ளது. பிற்காலத்தில் பல சாதனைகளை படைக்க முடியும் என்று நம்புகிறேன் என்று ஆதித்யன் ராஜேஷ் தெரிவித்தார்.

Previous Post

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்த செயல்திட்டத்துக்கு சர்வதேச நாடுகள் ஒப்புதல்

Next Post

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பாராட்டு

Next Post

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு பாராட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures