Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வீழ்ச்சியடையும் இலங்கை கிரிக்கெட்

September 18, 2018
in News, Politics, World
0
வீழ்ச்சியடையும் இலங்கை கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவரான அஞ்சலோ மெத்யூஸ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார்.

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் தோல்வியடைந்து, லீக் சுற்றுடன் இலங்கை வெளியேறிதே அதற்குக் காரணம்.

எமது இந்தத் தோல்வி முழு நாட்டுக்கும் இழுக்கு. அதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நாம் சிறப்பாக விளையாடவில்லை. முதல் போட்டியிலும் நாம் 150 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்தப் போட்டியிலும் அவ்வாறே. துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத காரணத்தாலேயே நாம் இந்தத் தோல்விகளை சந்தித்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். களத்தடுப்பில் நாம் உயர் மட்டத்தில் செயற்படாவிட்டாலும் இரண்டு போட்டிகளிலும் எம்மால் 250 ஓட்டங்களை எட்டியிருக்க முடியும். ஆகவே, இந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைய துடுப்பாட்ட வீரர்களே காரணம்.

என அஞ்சலோ மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முறை ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வீரர்கள் துடுப்பெடுத்தாடிய விதம் கடும் விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ளது.

முதல் போட்டியில் முதல் 4 விக்கெட்டுகளும் LBW முறையில் வீழ்த்தப்பட்டன.

அவ்வாறே முதல் போட்டியில் தசுன் ஷானகவும் இரண்டாவது போட்டியில் ஷெஹான் ஜயசூரியவும் ரன் அவுட் ஆக அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸே காரணமாக இருந்தார்.

பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகளிலுமே இலங்கை அணியின் ஒரு வீரரால் கூட அரைச்சதமடிக்க முடியவில்லை.

அது வீரர்களின் குறைபாடா அல்லது துடுப்பாட்ட பயிற்றுநரின் ஆலோசனைகளால் ஏற்பட்ட தவறா எனும் சந்தேகமும் எழுந்துள்ளது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுநர், வீரர்களின் துடுப்பாட்டப் பாணியை மாற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருப்பதே அதற்குக் காரணம்.

அத்துடன், இந்த 2 போட்டிகளிலும் இலங்கை அணியின் களத்தடுப்பு மிக மோசமாக இருந்தது. தவறவிடப்பட்ட பிடிகளே அதற்கு சான்று.

தெரிவுக் குழுவின் அணித் தெரிவு தொடர்பாக விமர்சிக்கப்படும் போது, அவர்களின் தீர்மானத்தில் பதிவான ஒரேயொரு நல்ல விடயமாக லசித் மாலிங்கவை தெரிவு செய்யதது மாத்திரமே உள்ளது.

கடந்த 2 வருடங்களில் 60 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இலங்கை அணி அவற்றில் 18 வெற்றிகளையும் 37 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடருக்குப் பின்னர் 15 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இலங்கையால் அவற்றில் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றிபெற முடிந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், உத்தியோகத்தர்களும் மேற்கொள்ளும் நிர்வாக ரீதியான குறைபாடுகளால் முழு நாடும் நேசிக்கும் கிரிக்கெட் விளையாட்டே பாதிக்கப்படுகின்றது.

விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரும், விளையாட்டுத்துறையின் உரிய அதிகாரியும் சிறப்புரிமைகளை மாத்திரம் எதிர்பார்த்து செயற்படாமல், கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்காக நடவடிக்கை எடுத்தாலே ஒழிய இவ்வாறான தோல்விகளைத் தவிர்க்க முடியாது.

2019 ஆம் ஆண்டு உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கு நீண்ட கால அவகாசம் இல்லை.

Previous Post

காணாமல் ஆக்கப்பட்ட 11 இளைஞர்களின் குடும்ப ஒன்றியத்தினர் கோரிக்கை மனுக்களை கையளிப்பு

Next Post

நகரசபை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத்தடை

Next Post

நகரசபை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு இடைக்காலத்தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

கேப்பாபிலவு காணி விடுவிப்பு போராட்டம் 21ஆவது நாளை எட்டியது: கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பின் ஆதரவு

July 14, 2026
வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

வடக்கு, கிழக்கில் தொல்லியல் விவகாரங்களுக்கு நியாயமான தீர்வு அவசியம் – இலங்கை தமிழ் அரசுக் கட்சி

July 14, 2026
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வு – நீதியமைச்சர்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை – சபாநாயகர் தெரிவிப்பு

July 14, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். சிறைச்சாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்ட விளக்கமறியல் கைதி

July 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures