Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அனைத்து தவறுக்கும் நானே முழுப்பொறுப்பு!

April 11, 2018
in News, Politics, World
0
அனைத்து தவறுக்கும் நானே முழுப்பொறுப்பு!

ஃபேஸ்புக் தகவல்கள் வெளியானதுக்கு நானே முழுப்பொறுப்பு, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெறுவதற்கு, ஃபேஸ்புக் பயனாளர்களின் தகவல்களைத் திருடி கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் உதவி செய்தது எனச் சமீபத்தில் பிரிட்டனின் சேனல் 4 செய்தி வெளியிட்டது. இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்துக்குக் குறிப்பாக அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வாஷிங்டனில் இருக்கும் அமெரிக்க பார்லிமென்ட் செனட் சபை, மக்கள் பிரதிநிதிகள் சபை முன் மார்க் இன்று ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அதில், “கேம்பிரிட்ஜ் அனாலிடிகா எங்களுக்குப் பாடத்தை கற்றுத் தந்துள்ளது. தகவல் திருட்டு மற்றும் வெளிநாட்டுத் தேர்தல்களில் தலையீடு உள்ளிட்டவை ஃபேஸ்புக் எதிர்கொண்டு வரும் மிகப்பெரிய பிரச்னை. இதனால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மில்லியன் கணக்கான தனிநபர்களின் தகவல்கள் அப்ளிகேஷன் டெவலப்பர்களிடம் இருந்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா வாங்கியுள்ளது. ஃபேஸ்புக்கை நான் தான் துவங்கினேன்; அதை நடத்தி வருவதும் நானே. எனவே, ஃபேஸ்புக் நிறுவனத்தில் நடக்கும் தவறுகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன். இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த விவகாரத்துக்கு பின் எங்களின் முதல்வேலையே உலக நாடுகளின் தேர்தல்களுடைய நேர்மையை காக்க வேண்டும் என்பதே. அந்தவகையில், இந்தியாவில் நடக்கவிருக்கும் தேர்தல்களின் நேர்மையை காப்போம் என உறுதியளிக்கிறோம்” என்றார்.

Previous Post

மாகாண சபைத் தேர்­தல் தொடர்­பில் நாளை 12ஆம் திகதி விளக்­கம்

Next Post

மாகாண சபை­யின் அனு­ம­தி­யு­டன் திட்­டத்தை நடத்­து­வதே சரி­யா­னது- சிவ­மோ­கன் எம்.பி. !!

Next Post

மாகாண சபை­யின் அனு­ம­தி­யு­டன் திட்­டத்தை நடத்­து­வதே சரி­யா­னது- சிவ­மோ­கன் எம்.பி. !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures