அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நாளை 12ஆம் திகதி விளக்கம் வழங்கப்படும் என்று , முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சராக நான் நிறுத்தப்படமாட்டேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியமைக்கான பதிலை நாளை 12ஆம் திகதி வெளியிடவுள்ளேன். இந்தியாவுக்கு தனிப்பட்ட பயணமாகச் செல்கின்றேன்.
இருப்பினும், அரசியல் ரீதியான சந்திப்புக்களிலும் கலந்து கொள்வேன் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தால், முதலமைச்சரின் கேள்வி பதில் அறிக்கை 11ஆம் திகதியிடப்பட்டு, நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

