முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தடுக்கக் கோரி வடக்கு மாகாண சபையால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் வடக்கு முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சின்களக் குடியேற்றங்களைத் தடுக்க கோரி முல்லைத்தீவுக்கு நேரில் சென்று ஆராயப்படும் என்றும், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என்றும் மாகாண சபை அறிவித்திருந்தது.
நேற்று சபையின் அவைத்தலைவர் உள்ளிட்ட அமைச்சர்கள், உறுப்பினர்கள் அங்கு சென்று நிலமைகளை அவதானித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அதில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் இதில் பங்கு கொள்ளவில்லை.
அதேவேளை, வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு இந்தியா பயணமாகியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

