தமிழ்த் தேசியத்தின் மூத்த தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் மறைவுக்கு இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் சபையில் அஞ்சலி செலுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (16) திங்கட்கிழமை நடைபெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இவ்வாறு அஞ்சலி செலுத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கில் இருக்கின்ற எமது தமிழ் மக்களுக்காக, உரிமைக்காக குரல் கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் இழப்பு தமிழ் மக்களால் ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என சுட்டிக்காட்டினார்.
தமிழருக்காக குரல் கொடுத்தவர்
தான் இறக்கும் வரையில் தமது கொள்கையிலும், தேசியத்திலும் பற்றுறுதியாக தமிழருக்காக குரல் கொடுத்த மாமனிதராகவே அவரை பார்க்கின்றோம் எனவும் அவருக்கு இந்த இடத்தில் எமது அஞ்சலியை செலுத்துகின்றோம்“ எனவும் தெவித்தார்.

இதேவேளை உடல்நலக் குறைவு காரணமாக சனிக்கிழமை (14) நள்ளிரவு காலமான சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் 16ஆம் நாளன்று நடைபெற்று பெருந்திரளானோர் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.













