Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : எம் எம் ஸ்டுடியோஸ்

நடிகர்கள் : வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், அபிராமி வெங்கடாசலம், ஏ. வெங்கடேஷ், அருள் டி சங்கர், சபீதா ராய், மூர்த்தி மற்றும் பலர்.

இயக்கம் : தீரண் அருண்குமார்

மதிப்பீடு : 2/5

சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கு வணிக ரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பிரபல நடிகரான வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படமான ‘பிளாக் கோல்ட்’-  ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? பெறாதா? என்பதை தொடர்ந்து காண்போம்.

தனியார் நிறுவனத்தில் நான்கு சக்கர வாகனங்களை பழுது பார்க்கும் பொறியாளராக பணிபுரிகிறார் செல்வா( வெற்றி) . இவரின் தந்தை மாரிமுத்து ( லிவிங்ஸ்டன்) தனியார் நிறுவனம் ஒன்றில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் சாரதியாக பணியாற்றுகிறார். செல்வாவிற்கு பிரத்யேக நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தை சிறிய அளவில் நடத்தி வரும் ரேணு( பிரியாலயா ) எனும் காதலியும் இருக்கிறார்.

இவர்களது காதலுக்கு ரேணுவின் பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் செல்வாவின் பெற்றோர்கள் தங்கள் மகனின் காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார்கள். இந்த நிலையில் ஏற்றுமதி நிறுவனத்திற்காக கோடிக்கணக்கிலான மதிப்புடைய பொருளை ஏற்றிக் கொண்டு மாரிமுத்து நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது… ஒரு மர்ம  கும்பலால் திசை திருப்பப்பட்டு கடத்தப்படுகிறார்.

மாரிமுத்துவும் காணவில்லை. அவர் எடுத்துச் சென்ற கோடிக்கணக்கிலான ஏற்றுமதி பொருளும் காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான தங்கதுரை ( ஏ. வெங்கடேஷ்) காவல்துறையில் புகார் அளிக்கிறார். இந்த புகார் குறித்து காவல்துறை அதிகாரியான ரெஜினா சாமுவேல் ( அபிராமி வெங்கடாசலம்) விசாரிக்க தொடங்குகிறார்.

உடல்நிலை சரியில்லாத தருணத்திலும் முதலாளி மீதான விசுவாசத்தின் காரணமாக ஏற்றுமதி பொருளை குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேர்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட தனது தந்தை மாரிமுத்துவை காணவில்லை என்றதும்… அவர் மீது அதீத பாசம் கொண்ட செல்வா பதறி அடித்து இது தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் அளிக்கிறார். அத்துடன் தன் தந்தை மீது தனியார் நிறுவன உரிமையாளர் திருட்டு பட்டம் சுமத்தியதால் மன உளைச்சல் அடைந்த செல்வா… அந்த குற்றவாளிகள் யார்? என தன் பாணியில் விசாரிக்க தொடங்குகிறார். இவரது முயற்சியில் வெற்றி கிடைத்ததா? இல்லையா? அவரது தந்தையை மீட்டாரா? இல்லையா? என்பதை பரபரப்பாக விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

வழக்கமான தந்தையை கொன்றவனை பழிக்கு பழிவாங்கும் மகனின் கதை. இதனை தனியார் தலைமுடி ஏற்றுமதி நிறுவனத்தின் பின்னணியில் விவரித்திருப்பது தான் இதன் சிறப்பம்சம்.

தலைமுடி ஏற்றுமதியின் பின்னணியில் ஒரு சர்வதேச வணிக உலகம்  இருப்பதை இயக்குநர் திரையில் காட்சிப்படுத்தி இருப்பது புதுமை என ஒப்புக் கொண்டாலும்… கடந்த தசாப்தங்களில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்களில் இடம் பிடித்த சுருள்வாள் சண்டை காட்சி.. இதில் இடம் பிடித்திருப்பது சாதகமான அம்சம் என ஒப்புக்கொண்டாலும்… அதனை இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் திரை மொழியில் விவரிக்காமல் விட்டிருப்பது தான் சோகம்.

திரைப்படத்தைக் காண பட மாளிகைக்கு வரும் ரசிகர்களுக்கு ‘தியேட்டரிக்கல் மொமென்ட்ஸ்’ என்று ஒரு அம்சம் தற்போதைய தலைமுறை ரசிகர்களிடம்  பிரசித்தம். அத்தகைய காட்சிகள் எதுவும் இந்தப் படத்தில் முதல் பாதியிலோ இரண்டாம் பாதியிலோ இடம் பெறாததால் ரசிகர்கள் தங்களது கைபேசியை பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள்.

முதல் பாதியில் சுவாரசியமான அம்சங்கள் எதுவும் இல்லை. இரண்டாம் பாதியில் தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான பாச உணர்வை ரசிகர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது பலம்.

சுருள்வாள் சண்டைக் காட்சியில் ரசிகர்களை கவரும் வகையிலான கோணங்கள்.. குறிப்பாக கழுகு பார்வை கோணங்களில் அந்த எக்சன் காட்சிகள் அமைக்கப்படாததற்கு இயக்குநர்- ஒளிப்பதிவாளர்- சண்டை பயிற்சி இயக்குநர் -மட்டுமே பொறுப்பேற்க வேண்டும்.  நன்றாக அமைந்திருக்க வேண்டிய எக்சன் காட்சியை சாதாரணமாக கடந்து சென்று விட்டனர்.

உரையாடல்களோ… காட்சி அமைப்புகளோ… எதுவுமே பார்வையாளர்களை உற்சாகப்படுத்தவில்லை. அதிலும் நகைச்சுவை காட்சிகள் இல்லாதது பெரும் குறை. 

இதில் காவல்துறை அதிகாரி குபேரன் தொடர்பான காட்சியில் ஒரேயொரு காட்சியைத் தவிர்த்து ஏனைய காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டது போல் இருக்கிறது.

செல்வா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வெற்றி-  அந்த கதாபாத்திரத்திற்கான தோற்றத்தை பராமரிப்பதில் அலட்சியம் காட்டி இருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சியில் அவர் இன்னும் அதிரடியாக நடித்திருக்கலாம் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறார். 

நைனா ராஜா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அருள் டி சங்கர் – தங்கதுரை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ஏ. வெங்கடேஷ் – ரேணு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பிரியாலயா ஆகியோர் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும்  ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. இந்த கதையை செல்வாவின் பின்னணி  குரலில் விவரிக்கப்பட்டிருப்பது திரைக்கதைக்கு உரிய வலிமையை சேர்க்கவில்லை. முதல் காட்சியிலேயே பின்னணியில் ’10 கிராம் தலைமுடி இருபது ரூபாய்..’ என குரலொலியால் ஒலிக்க செய்திருப்பதன் மூலம் ரசிகர்களுக்கு படத்தைப் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்திய இயக்குநர்… அது பற்றிய விவரணங்களை இரண்டாம் பாதியில் குறிப்பிட்டிருப்பது… பசி இல்லாத நேரத்தில் ‘கமகம’ பிரியாணியை பரிமாறுவது போல் இருக்கிறது.

பிளாக் கோல்டு – க்ராக் கோல்டு

Previous Post

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

November 13, 2026

Recent News

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

பிளாக் கோல்டு – திரைப்பட விமர்சனம்

November 14, 2026
ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

ஈழத்தை நேசிக்கும் கலைஞன் ஜோ மல்லூரி அவர்கள்

November 13, 2026
ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்து வரும் ‘ராமாயணம்’

November 13, 2026
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் 120 தாதியர் பற்றாக்குறை: தொழிற்சங்க போராட்டம்

November 13, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures