Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டம்

November 12, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று (12) பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடுகள்

– 2027ஆம் ஆண்டுக்கான மொத்த அரச செலவீனம்: ரூ. 4,99,277.03 கோடி.

– 2026ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம்: ரூ. 4,43,435.65 கோடி.

– இந்த முறை முதன்முறையாக மீண்டெழும் செலவுகளுக்காக 2000 பில்லின் ரூபா ஒதுக்கீடு.

– கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செலவீனம் ரூ. 55,841.38 கோடியால் அதிகரிப்பு.

– பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு மொத்தமாக ரூ. 68,850 கோடி ஒதுக்கீடு.

– 2026ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு ரூ. 4,050 கோடியால் அதிகரிப்பு.

– ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுகள் மற்றும் ஜனாதிபதி செயலகச் செலவுகளுக்கு மொத்தமாக ரூ. 1,35,205.68 கோடி ஒதுக்கீடு.

– ஜனாதிபதிக்கான செலவீனம் ரூ. 1,120.38 கோடி.

– பிரதமருக்கான செலவீனம் ரூ. 102.21 கோடி.

வரவு – செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு

– இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் – 7 நாட்கள்.

– நவம்பர் 13 முதல் நவம்பர் 20 வரை இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம்.

– நவம்பர் 20ஆம் திகதி மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு.

– குழுநிலை விவாதம் – 19 நாட்கள்.

– நவம்பர் 21 முதல் டிசம்பர் 14 வரை குழுநிலை விவாதம்.

– டிசம்பர் 14ஆம் திகதி மாலை 6 மணிக்கு மூன்றாம் மதிப்பீடு மீதான இறுதி வாக்கெடுப்பு.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தற்போது பாராளுமன்றத்தை வந்தடைந்தார்.

நிதியமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2027 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சபையில் முன்வைத்து  உரையை ஆரம்பித்தார்.

– நாட்டின் மக்கள் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை முழுமையாக பாதுகாத்துள்ளோம்.

– பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளெழும் திட்டங்களுடன் அரச நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்கிறோம்.சிறந்த சமூகத்தை       உருவாக்குவது வரவு – செலவுத் திட்டத்தின் பிரதான இலட்சியமாகும்.

– அரச நிதியை சேகரிப்பது மாத்திரம் எமது பொறுப்பல்ல ஒவ்வொரு ரூபாவுக்கும் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்.அதுவே எமது இலக்கு.

– நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை, இலக்கு, பூகோள தாக்கம் மற்றும் சாதக,பாதக காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

– எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் முன்மொழிவுகள் பல்வேறு தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளன.

– பொருளாதார பரிமாற்றம் – நிலையான அபிவிருத்தி 2027 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்தின் பிரதான இலக்காகும்.

– 07 பிரதான மூலோபாய திட்டங்களை உள்ளடக்கிய வகையில் வரவு –  செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

– பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் தியாகத்துக்கு சலுகை பெற்றுக் கொடுப்பேன்.

– பேரண்டப் பொருளாதாரம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த நாணயக் கொள்கை வலுவானதாகவே பேணப்படும்.

– வெளிநாட்டு கையிருப்பில் முன்னேற்றகரமான தன்மை இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

– 2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் மீண்டெழும் செலவுகளுக்காக 2000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்டம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்ததுடன் நிறைவடையும்.

– செயல்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக நிதி பிரதி அமைச்சர் தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

– பழைய சட்டங்களை வைத்துக் கொண்டு புதிய பொருளாதார பரிமாற்றத்தை அடைய முடியாது.

– பொருளாதாரம் மற்றும் நிதி கட்டமைப்புடன் தொடர்புடைய சகல சட்டங்களும் திருத்தப்படும்,புதிய சட்டங்கள் இயற்றப்படும்.அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

– நுண்கடன் திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் கடன் திட்ட நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் எதிர்வரும் ஆண்டின் முதல் காலப்பகுதியில் நுண்கடன் கண்காணிப்பு நிறுவனம் ஸ்தாபிக்கப்படும்.

– சீனாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

– அரச முதலீட்டை மொத்த தேசிய உற்பத்தியில் 14 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானம்.

– அரச சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்க ” கெளடெக் ” (govtech) நிறுவனத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படும். இதற்கான சுற்றறிக்கை வெகுவிரைவில் வெளியிடப்படும்.

– கூரை சூரிய மின்சக்தி பயனாளர்களுக்கு மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ 3.5 பில்லியன் ரூபா நிவாரணம். ஒரு கிலோ வோட்டுக்கு 25000 ரூபாய் வழங்கப்படும்.  10 கிலோ வோட் வரை அதிகரிக்க 250000 ரூபாய் மானியம்.

– டிஜிட்டல் துறை அபிவிருத்திக்காக 28,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– டிஜிட்டல் பொருளாதார அதிகாரசபை சட்டமூலம் எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதமளவில் முன்வைக்கப்படும்.

– ஆசிரிய பயிற்சி கல்லூரி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் 10,500 ரூபா கொடுப்பனவு 20, 000 ரூபாவாக அதிகரிக்கப்படும்.

– பாடசாலை கல்வி கட்டமைப்பு மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக 35 ,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

– வவுனியா பல்கலைக்கழக தங்குமிட விடுதி வசதிக்காக 2500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– இலங்கை – ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்த நடவடிக்கைகளுக்காக 3430 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

– வீதிகள், அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் புகையிரத பாதை அபிவிருத்திக்காக 251 பில்லியன் ரூபா ஒதுக்கீடு

– கிராமிய பாலம் அபிவிருத்திக்காக 10,500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க 54,134 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– பாராளுமன்றத்துக்கு மேலான வான்பரப்பில் விமானம், ஹெலிக்கொப்டர் செல்வதற்கு தற்போது அமுலில் உள்ள தடை விரைவாக     நீக்கப்படும்.

– கடற்றொழில் துறை அபிவிருத்திக்காக 6200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– பேசாலை மீன்பிடி துறைமுக அபிவிருத்திக்காக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– நீரழிவு நோயாளர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாகவும், விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாகவும் அதிகரிப்பு.

– வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக 6000 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– பெருந்தோட்ட பகுதியில் இந்திய அரசின் ஒத்துழைப்புடனான 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை விரைவுபடுத்த நடவடிக்கை.

– பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 200 ரூபா ஊக்குவிப்பு தொகை அடுத்தாண்டும் வழங்கப்படும்.

– பெருந்தோட்ட கம்பனிகளுடனான ஒப்பந்தத்தை மீள்பரீசிலனை செய்ய விசேட குழு நியமனம்.

– அரச சேவையாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுக்காக 110 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

 – அப்பியாசப் புத்தகம் மற்றும் அச்சிடப்பட்ட புத்தகம் மீதான வற் வரி நீக்கம்.

– வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினரின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறையினரை இலங்கையுடன் இணைக்கும் வகையில், “உலகளாவிய இலங்கை மரபுரிமைக் குடிமகன்”  திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

– அதற்கமைய இரட்டைக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும், மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளுக்கும் எவ்வித கட்டணமுமின்றி இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும்.

– யானைத் தாக்குதலால் இடம்பெறும் உயிரிழப்புக்கு தற்போது வழங்கப்படும் ஒரு மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகை 2 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.

– புகையிரத சேவையை இலத்திரனியல் மயப்படுத்த 80 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– புகையிர நிலையங்களை புனரமைப்பதற்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு. அதேபோல் புதிதாக 5 புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு.

– 2027 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் கொழும்பு – பதுளை புகையிரத சேவையை முழுமையாக ஆரம்பிக்க துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

– யாழ் மற்றும் வன்னி மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுக்காண முதற்கட்டமாக 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

– தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தில் அதிகரிப்பும் தொடர் வரி வரம்புகளில் திருத்தமும் 

– 800 இறக்குமதி HS குறியீடுகளுக்கான செஸ் வரி 25% குறைப்பு: 2027 ஜனவரி முதல் செய்தித்தாள் அச்சிடும் கடதாசிக்கான PAL வரி நீக்கம்  

– திரையரங்கு நுழைவுச்சீட்டு மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரியைக் கணிப்பதற்கான அடிப்படையினை திருத்துதல் –

Previous Post

ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Next Post

தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தில் அதிகரிப்பும் தொடர் வரி வரம்புகளில் திருத்தமும்

Next Post
வரி செலுத்தும் அனைவருக்கும் விசேட அறிவிப்பு!

தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தில் அதிகரிப்பும் தொடர் வரி வரம்புகளில் திருத்தமும்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

ஐ.எஸ்.குழுவில் இணைய ஆர்வம் காட்டும் சுவிஸ் இளைஞர்கள்!

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

பிலிம்பேர் 2016 – விருது வென்றவர்கள் முழு பட்டியல்

தனுஷால் தள்ளிப்போகும் அஜித் படம்

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

பாகிஸ்தானின் சக்கிப் 7 விக்கெட் குவியல், நான்காம்  நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் வேளையோடு நிறுத்தம்

November 12, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

வடக்கு – கிழக்கு மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக 4000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

November 12, 2026
வரி செலுத்தும் அனைவருக்கும் விசேட அறிவிப்பு!

தனிப்பட்ட வருமான வரி நிவாரணத்தில் அதிகரிப்பும் தொடர் வரி வரம்புகளில் திருத்தமும்

November 12, 2026
ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டம்

ஜனாதிபதி அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 3 ஆவது வரவு – செலவுத் திட்டம்

November 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures