வாழ்வு ஒரு பரிசு
தொலைத்திடலாமா
வாழ்வு ஒரு பூ
வீசிடலாமா
வாழ்வு ஒரு நதி
வற்றிடலாமா
வாழ்வு ஒரு பட்சி
வீழ்ந்திடலாமா
மொழிகளைப் போல்
மோகித்து விரி
ஒளியினைப் போல்
சுடர்ந்து முடி
பட்டாம் பூச்சிகள் அழுவதுண்டா
வண்ணத்துப் பூச்சிகள் நாளை அளப்பதுண்டா
பட்டமரங்கள் பறவைக்கு இருப்பிடமாகாதா
தோற்ற மனிதன் வெற்றிக்கு விதை ஒன்றாய் ஆகானா
தோல்வி என்று எதுவுமில்லை
உன் தோழ்கள் சுருங்காத வரை
அவமானம் என்று யாது மில்லை
அகிலத்தை சுருக்காதவரை
சிரசினில் எதற்கு கிரீடம்
குடிசையில் மன்னனாகு
அருகினில் எதற்கு சேனை
அன்பினில் லயித்திடு
தூக்கத்தை ஆடையாக்கும் பெண்ணைத் தாவு
கூந்தலைப் பாயாக்கும் அவளில் தூவு
ஒரு சிறு புன்னகை பறி
ஓராயிரம் புதினங்கள் வரை
ஒரு தேனீர்க் குவளையில்
அவளை எழுது
அன்புக்கு வளை காப்பு செய்
அடுத்தவன் தரும்
சான்றிதழுக்கு அலையாதே
அனௌபைத் தரும்
அப்பாவியை எறியாதே
ஆழ் கடல் முத்தை விட
கரை தேடும் நுரைகள் சொல்லும்
வாழ்வு என்ன என
நீயும் நானும்
நீர்க்குமிழியில் நீந்தும் வனம் அறியாயோ.
த. செல்வா











