Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

October 31, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

இலங்கையின் பாரம்பரிய அரசியல் உத்திகளுக்கும் கூட்டணி கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டு, நாட்டின் எதிர்காலத் தேர்தல்களில் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள இளம் தலைமுறையினரை நோக்கி கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும். ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணியமைப்பது மட்டுமே வெற்றிக்கு வழிவகுக்காது. சுமார் 80 இலட்சம்  Gen Z   மற்றும் புதிய நூற்றாண்டுத் தலைமுறை வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெறுவதே எமது முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை (30) ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில்,

ஐ.தே.க. மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளும் இணைந்தாலே தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்ற பரவலான எண்ணத்தை நான் நிராகரிக்கின்றேன்.

இவ்விரு கட்சிகளும் இணைந்தால் வெற்றி நிச்சயம் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள். ஆனால், இன்றைய அரசியல் சூழல் முற்றிலும் மாறிவிட்டது. வெறும் கூட்டணிகளையும் பாரம்பரிய வாக்கு வங்கிகளையும் மட்டுமே நம்பி இனி எந்தக் கட்சியும் தேர்தலில் வெல்ல முடியாது.

இலங்கையின் மொத்த வாக்காளர்களில்  Gen Z  அதாவது 1990-களின் இறுதியில் இருந்து 2010-களின் தொடக்கம் வரை பிறந்தவர்கள் மற்றும் புதிய நூற்றாண்டு தலைமுறையினரின் அதாவது 1980-களின் தொடக்கம் முதல் 1990-களின் இறுதி வரை பிறந்தவர்கள் எண்ணிக்கை சுமார் 80 இலட்சத்தை எட்டுகிறது.

இந்த 80 இலட்சம் இளம் வாக்காளர்களில் பெரும்பாலோர் இன்னமும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் தங்களது ஆதரவை உறுதி செய்யாமல் நடுநிலை வகிக்கின்றனர். வரவிருக்கும் தேர்தல்களில் இவர்களின் முடிவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். 

குறிப்பாக, 2022-ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு, நாட்டின் இளைஞர்கள் பாரம்பரிய அரசியல் அமைப்புகள் மற்றும் தலைவர்கள் மீது கடுமையான ஏமாற்றமும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

இலங்கை செய்திகள்

இலங்கை மட்டுமல்லாது பங்களாதேஷ், நேபாளம் மற்றும் செர்பியா போன்ற நாடுகளிலும் இளைஞர்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்கள் உலக அரசியல் போக்கையே மாற்றியமைத்துள்ளன. உலகளவில் இளைஞர்களின் குரல் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

65 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி, காலத்தின் தேவைக்கேற்ப தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காக, புதிய நூற்றாண்டு தலைமுறையினர் மற்றும்  Gen Z  ஆகிய இரண்டு புதிய பிரிவுகளை உருவாக்கி இளைஞர்களுடன் நேரடியாக உரையாடல்களைத் தொடங்க வேண்டும்.

பாரம்பரியமாக கிராமங்கள் தோறும் கட்சி அமைப்புக் கிளைகளை நிறுவும் பழைய முறைகளைக் கைவிட்டு, நவீன டிஜிட்டல் தளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நேரடியாக மக்களைச் சென்றடையும் புதிய அரசியல் முறைகளை இக்குழுக்கள் கையாள வேண்டும்.

இளம் வாக்காளர்களை மையமாகக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அடையாளத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமானது. இளைஞர்களை உள்ளடக்காத எந்தவொரு அரசியல் நகர்வும் எதிர்காலத்தில் வெற்றிபெற முடியாது. பாரம்பரிய அரசியல் வழிகளிலிருந்து விலகி, இளைஞர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பக் கட்சியை மறுசீரமைப்பதே ஐ.தே.க.வின் எதிர்கால மூலோபாயமாக இருக்கும் என்றார். 

Previous Post

கோழி திருட்டுத் தகராறில் இடம்பெற்ற கொலை: இருவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதிசெய்தது நீதிமன்றம்!

Next Post

வன்னியில் 8,552 அரச வீடுகள் நிறைவுறாத நிலை – 2027 வரவு செலவுத்திட்டத்தில் விசேட நிதி கோரும் ரவிகரன்

Next Post
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வன்னியில் 8,552 அரச வீடுகள் நிறைவுறாத நிலை – 2027 வரவு செலவுத்திட்டத்தில் விசேட நிதி கோரும் ரவிகரன்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட டீசர்

ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘ட்ரெயின்’ பட டீசர்

November 1, 2026
முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

முதலமைச்சர் விஜய் டைட்டில் கார்டால் அதிர்ந்த திரையரங்கம்! : ஜனநாயகன் 100ஆவது நாள் கொண்டாட்டம்

October 31, 2026
செனகலின் டாக்கரில் 4ஆவது இளையோர் ஒலிம்பிப் விழா இன்று ஆரம்பம்

செனகலின் டாக்கரில் 4ஆவது இளையோர் ஒலிம்பிப் விழா இன்று ஆரம்பம்

October 31, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வன்னியில் 8,552 அரச வீடுகள் நிறைவுறாத நிலை – 2027 வரவு செலவுத்திட்டத்தில் விசேட நிதி கோரும் ரவிகரன்

October 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures