Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சட்டமும் நீதியும் 2 –  இணையத்தொடர் விமர்சனம்

October 24, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

தயாரிப்பு : 18 கிரியேட்டர்ஸ்

டிஜிட்டல் தளம் : ஜீ 5

வெளியீட்டு திகதி : 23-10-26

நடிகர்கள்: சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா, கல்லூரி வினோத், ‘ஆறு’ பாலா, பிரேம், கவிதா பாரதி மற்றும் பலர்.

இயக்கம்: பாலாஜி செல்வராஜ்

மதிப்பீடு: 2 /5

நடிகர் ‘பருத்திவீரன்’ சரவணன் சட்டத்தரணியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடரின் முதல் பாகத்திற்கு டிஜிட்டல் தள ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவிற்கு பிறகு,  மிக குறுகிய கால அவகாசத்திற்குள் இந்த தொடரின் இரண்டாம் பாகம் தயாராகி, ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.

சட்டமும் நீதியும் இணைய தொடரின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், இரண்டாவது பாகத்திலும் தொடர்ந்ததா? இல்லையா? என்பதை நாம் தொடர்ந்து காண்போம்.

நீதிமன்றங்களில் வாதாடும் சட்டத்தரணிகளின் சங்க தலைவியான சந்திரா ( வரலட்சுமி சரத்குமார்) வின் கணவரும், பிரத்யேக காவல் நிலையத்தின் உயர் அதிகாரியுமான கனகவேல் ( பிரேம்) துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.

இதில் குற்றவாளிகளாக காவல் நிலையத்தில் பணியாற்றும் சங்கர், இப்ராஹிம், முருகானந்தம், குமார் ஆகிய நான்கு காவலர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டு, விசாரணை நடைபெற தொடங்குகிறது.

இந்த வழக்கில் சட்டத்தரணிகளின் சங்கத் தலைவி தலையிட்டிருப்பதால்.. சட்டத்தரணிகளின் சங்கத்தில் பதிவு செய்து கொண்ட சட்டத்தரணிகள் யாரும் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடக்கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.. குற்றம் சாட்டப்பட்ட நான்கு காவலர்களின் ஒருவரான இப்ராஹிம் எனும் காவலரின் மனைவியான பானு,’ நீதிமன்றத்தில் ஏழைகளுக்கு நீதி கிடைக்காதா?’ என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்ப, அங்கு பொருளாதார நிலையில் போராடினாலும் நேர்மையை உறுதியாக பற்றி கொண்டிருக்கும் சட்டத்தரணி சுந்தரமூர்த்தியின் கவனத்தை ஈர்க்கிறது. அதனால் அவர் இந்த வழக்கில் ஆஜராகிறார்.‌

இந்த வழக்கு சிக்கலான ஒன்றாக நீடிக்கிறது. நடைபெற்றது கொலையா? தற்கொலையா? என்று ஒருபுறமும்…. கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு காவலர்கள் அசலான குற்றவாளிகள் தானா…? இந்த கொலை நடைபெற்றதன் பின்னணி என்ன? கொலையாளி யார்? அவரை சட்டத்தரணி சுந்தரமூர்த்தி கண்டறிந்தாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்பாக விவரிப்பது தான் ஆறு அத்தியாயங்களைக் கொண்ட இந்த இணைய தொடரின் பரப்பரப்பான திரைக்கதை.

முதலில் இந்த இணைய தொடரை நான் லீனியர் பாணியில் தொகுத்து ரசிகர்களுக்கு வழங்கி இருப்பது பலம். அதுவே இயக்குநரின் புத்திசாலித்தனம்.

ஆறு அத்தியாயங்களில் முதல் ஐந்து, ஆறு ஆகிய அத்தியாயங்கள் பரபரப்பையும், விறுவிறுப்பையும் அளித்து ரசிகர்களை உற்சாகப்பட வைக்கிறது.

தண்டனைக்குரிய குற்றவாளி, கண்டனத்திற்குரிய குற்றவாளிகள் என இருவருக்கும் இடையே யார் அசலான குற்றவாளி? என்பது தொடர்பான கதை என்பதால்.. சாதாரண வெகுஜன பார்வையாளர்களால் இக்கதையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியவில்லை.

உரையாடல் பல இடங்களில் கவனத்தை ஈர்க்கிறது. சட்டத்தரணி சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் நடிகர் சரவணன் இயல்பாகவும் , சிறப்பாகவும் நடித்து ரசிகர்களை வழக்கம் போல் வசப்படுத்துகிறார். 

சந்திரா கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் ,திரையில் தோன்றும் காட்சிகளில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

வேலை வாய்ப்பு

கனகவேல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரேம், காவலர்களாக நடித்திருக்கும் கல்லூரி வினோத்- ஆறு பாலா- கவிதா பாரதி- ஆகியோர் தங்களுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

சில அத்தியாயங்களின் முடிவில் இடம் பெறும் டிவிஸ்ட் – வலிந்து திணிக்கப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

இணைய தொடராக இருந்தாலும் ஒளிப்பதிவு, பாடல்கள், பின்னணி இசை ஆகியவை ரசிகர்களுக்கு தொடர்ந்து தொடரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.

உச்சக்கட்ட காட்சியில் இடம்பெறும் டிவிஸ்ட் – இந்த தொடரின் அடுத்த பாகத்திற்கு வித்திடுவதும் கவனம் ஈர்க்கிறது.

சட்டமும் நீதியும் 2 – வாய்தா 2.

Previous Post

வலி. வடக்கு பகுதிகளில் காணி விடுவிப்புக்கோரி போராட்டம்

Next Post

ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

Next Post
ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உயர்மட்டக் கலந்துரையாடல்

இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த உயர்மட்டக் கலந்துரையாடல்

October 24, 2026
ஞானசார தேரரை காவி உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி மனு தாக்கல்

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி எட்டாவது நாளாகவும் சத்தியாக்கிரகப் போராட்டம்

October 24, 2026
ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

ஆசிய பரா விளையாட்டு விழாவில் இலங்கைக்கு மேலும் இரண்டு பதக்கங்கள்

October 24, 2026
ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் ‘சட்டமும் நீதியும் : சீசன் 2’

சட்டமும் நீதியும் 2 –  இணையத்தொடர் விமர்சனம்

October 24, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures