Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி

September 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

குழந்தைகள் நாட்டின் சொத்துக்கள் என்பதால், அவர்களின் உயிரைப் பாதுகாப்பது பொறுப்பான அரசின் முக்கிய கடமை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘திவியட்ட சவியக்’ வீட்டுத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் நேற்று (17.09.2026) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\

இத்திட்டத்தின் கீழ், சிறுவர் அபிவிருத்தி நிலையங்களில் வளர்ந்து 18 வயதை பூர்த்தி செய்த பின்னர் சமூகமயமாகும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பற்ற, அதிக ஆபத்தான சூழ்நிலைகளில் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான வீடுகளை அமைப்பதற்காக தலா 20 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இந்த நிதியுதவி வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி | The Government S Key Duty President

குழந்தைகள் எந்தச் சூழலில் வளர்ந்தாலும் அவர்கள் நாட்டின் குழந்தைகள் என்பதால், அவர்களின் பாதுகாப்பான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக அரசாங்கம், சமூகம் மற்றும் பெற்றோர் அனைவருக்கும் பொறுப்பு உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எந்தவொரு குழந்தையும் பாதுகாப்பற்ற நிலையில் அல்லது அன்பும் அரவணைப்பும் இல்லாமல் வளரக்கூடாது எனத் தெரிவித்த அவர், ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பாக வாழக்கூடிய சூழலை உருவாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் கூறினார்.

சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கான வங்கிக் கணக்குகளைத் திறந்து ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் சேமிப்பாக வைப்பதற்கான திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு

அத்துடன், 18 வயதை பூர்த்தி செய்து சமூகமயமாகும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்காக அவர்களுக்கு வீடுகளை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி | The Government S Key Duty President

பாதுகாப்பற்ற வீடுகளில் வசிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, கடந்த ஆண்டு பாதுகாப்பான வீடொன்றை அமைப்பதற்காக 10 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு அந்த உதவித் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் தொகையும் போதுமானதாக இல்லாவிட்டால், குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக மேலும் நிதி ஒதுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தால் மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய பணியல்ல எனக் குறிப்பிட்ட அவர், அதற்காக சமூகமும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

எந்தவொரு குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேசிய ரீதியில் குழந்தைகளைப் பாதுகாக்கும் பொறுப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக அரசாங்கமும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

Previous Post

நடிகர் சிலம்பரசன் டி ஆர் வெளியிட்ட அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ பட முன்னோட்டம்

Next Post

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

அனோஜனுக்கு மன்னிப்பு : இலங்கை அரசு துரித நடவடிக்கை

September 20, 2026
நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘சிக்மா’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

September 20, 2026
ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் ஜப்பானை இலகுவாக வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் ஜப்பானை இலகுவாக வென்றது இந்தியா

September 19, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சிவராஜா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமரின் நேரடி தலையீடு அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

September 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures