Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா

September 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தமானது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதையும் அது குறித்து விவாதிப்பதையும் தடுப்பதற்கு அரசு முற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று சனிக்கிழமை (19)  இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் கொண்டுவர முனையும் 22 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், மிகக் குறுகிய காலத்திற்குள் 27 மேல் நீதிமன்ற நீதிபதிகள், 9 மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் 4 உயர் நீதிமன்ற நீதியரசர்களை தன் விருப்பப்படி நியமிக்கும் முழு அதிகாரம் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்குக் கிடைக்கும்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் அரசியலமைப்புச் சபைக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. இது இலங்கை நீதித்துறை வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அதன் சுயாதீனத்தையும் சர்வதேச நம்பகத்தன்மையையும் சீர்குலைக்கும்.

அதேவேளை, அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தமானது மக்களின் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது. அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகளின் சொத்து விபரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்வதையும் அது குறித்து விவாதிப்பதையும் தடுப்பதற்கு அரசு முற்படுகிறது. சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குவதில் நீதிமன்றங்களுக்கு இருக்கும் சுதந்திரமான அதிகாரத்தைக் குறைக்கவும் இச்சட்டமூலத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திருத்தங்களுக்கு நாட்டின் பதவி வகிக்கும் நீதிபதிகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மாத்திரமன்றி, ஆசிய சட்டத்தரணிகள் சங்கம், காமன்வெல்த் சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சுயாதீனத்திற்கான சிறப்புப் பிரதிநிதி உட்பட பல சர்வதேச அமைப்புகளும் பலத்த எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.

அரசாங்கத்தில் பதவிகளையும் சிறப்புரிமைகளையும் அனுபவிக்கும் மிகச் சில சட்டத்தரணிகளைத் தவிர, 99 சதவீதமான சட்டத்தரணிகள் இத்திருத்தத்திற்கு எதிராகவே உள்ளனர்.

எனவே, 22 ஆவது திருத்தம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் ஆரம்பமாகும் வரும் 24 ஆம் திகதி காலை, பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள பொல்தூவ சந்தியில் பிரமாண்ட மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். கட்சி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க அனைத்துப் பொதுமக்களையும் இப்போராட்டத்தில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்றார். 

Previous Post

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி

Next Post

சிவராஜா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமரின் நேரடி தலையீடு அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

Next Post
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சிவராஜா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமரின் நேரடி தலையீடு அவசியம் - ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் ஜப்பானை இலகுவாக வென்றது இந்தியா

ஆசிய விளையாட்டு விழா மகளிர் ரி20 கிரிக்கெட் ஜப்பானை இலகுவாக வென்றது இந்தியா

September 19, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

சிவராஜா அனோஜன் விவகாரத்தில் ஜனாதிபதி அல்லது பிரதமரின் நேரடி தலையீடு அவசியம் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்

September 19, 2026
புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா

புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது | அஜித் பி பெரேரா

September 19, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

குழந்தைகளின் உயிரைப் பாதுகாப்பது அரசின் முக்கிய கடமை: ஜனாதிபதி

September 19, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures