இனவழிப்புப் போர் முடிவுறுத்தப்பட்டு 16 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இன்னமும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலை நீடிக்கின்றது. ஆட்சிகள் பல மாறியும் தீர்வு விடயத்தில் எந்த முன்னெற்றமும் இல்லை.
அதற்காக நாம் சோர்ந்தோ, பின்வாங்கியோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சில முயற்சிகளை எடுப்பது யதார்த்தமான – அவசியமான அணுகுமுறையும் தேவையுமாகும்.
அன்பான உலகத் தமிழ் உறவுகளே!. வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய அதிகாரம் கொண்ட தமிழர் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும். அதனை ஒரு அரசியல் தீர்வாக இன்றைய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அனுர அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவது பற்றிய உங்கள் கருத்துக்களை அன்பாக வேண்டுகிறேன்.
ஈழ தேசத்திற்கு எதிராக உலகத் தமிழ் உறவுகளின் மனநிலைக்கு மாறாகவோ எந்தவொரு செயலையும் செய்ய ஒருபோதும் முனையமாட்டேன். உங்கள் அன்பான ஆரோக்கியமான கருத்துக்களை வைத்து சிறந்த முடிவொன்றை எடுக்கலாம் என்பதற்காகவே இந்தப் பதிவு வழியாக உங்களை வேண்டி நிற்கின்றேன்.
ஊடகப் போராளி கிருபா பிள்ளை













