Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவை இறுதிப் போட்டியில் இன்று எதிர்த்தாடுகிறது

September 13, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆசிய சம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா இலங்கை? இந்தியாவை இறுதிப் போட்டியில் இன்று எதிர்த்தாடுகிறது

ஆசிய கிரிக்கெட் பேரவையினால் துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடத்தப்பட்டு வரும் மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கையும் முன்னாள் சம்பியன் இந்தியாவும் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோதவுள்ளன.

மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் மூன்றாவது தொடர்ச்சியான தடவையாக இலங்கையும் ஆறாவது தொடர்ச்சியான தடவையாக இந்தியாவும் விளையாடவுள்ளன.

பங்களாதேஷில் 2022இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கையை 8 விக்கெட்களால் இந்தியாவும் தம்புள்ளையில் 2024இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவை 8 விக்கெட்களால் இலங்கையும் வெற்றிபெற்று சம்பியனாகி இருந்தன.

இந்த வருடம் இரண்டு அணிகளும் தோல்வி அடையாத அணிகளாக இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன.

பி குழுவில் இடம்பெற்ற இலங்கை லீக் சுற்றில் ஐக்கிய அரபு இராச்சித்தை 9 விக்கெட்களாலும் இந்தோனேசியாவை 75 ஓட்டங்களாலும் பங்களாதேஷை 4 விக்கெட்களாலும் வெற்றிகொண்டு அரை இறுதிக்கு முன்னேறியது.

அரை இறுதியில் பாகிஸ்தானை 4 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டதன் மூலம் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.

ஏ குழுவுக்கான லீக் சுற்றில் தாய்லாந்தை 94 ஓட்டங்களாலும் ஹொங்கொங்கை 137 ஓட்டங்களாலும் பாகிஸ்தானை 7 விக்கெட்களாலும் வெற்றிகொண்ட இந்தியா, அரை இறுதியில் பங்களாதேஷை 40 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் இதுவரை நடந்து முடிந்துள்ள 31 மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா 25 – 5 ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. ஒரு போட்டியில் முடிவு கிட்டவில்லை.

எவ்வாறாயினும், இன்றைய இறுதிப் போட்டியில் எந்த அணி சகலதுறைகளிலும் முழுமையான திறமையை வெளிப்படுத்துகின்றதோ அந்த அணியே சம்பியனாகும்.

அணிகள்

இலங்கை: சமரி அத்தபத்து (தலைவி), இமேஷா துலானி அல்லது விஷ்மி குணரட்ன அல்லது சஞ்சனா காவிந்தி, ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, கவிஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, கௌஷினி நுதியங்கனா, சுகந்திகா குமாரி, சமோதி ப்ரபோதா, மிதாலி அயோத்யா.

இந்தியா: ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா, ப்ராத்திகா ராவல், ஹாமன்ப்ரீத் கோர் (தலைவி), ரிச்சா கோஷ், தீப்தி ஷர்மா, பார்த்தி ஃபுல்மாலி, ப்ரேமா ராவத், ஸ்ரீ சரணி, க்ரான்தி கௌத், நந்தனி ஷர்மா.

Previous Post

கந்தரோடை விகாரையை நேரில் சென்று பார்வையிட்டார் புத்தசாசன அமைச்சர்!

Next Post

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்பட டிரெய்லர் வெளியீடு!

Next Post
ஹிப் ஹொப் தமிழா நடிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அப்டேட்

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” திரைப்பட டிரெய்லர் வெளியீடு!

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

September 14, 2026
புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

புளூ ஸ்டார் கழகத்தின் சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை தீர்மானிக்கும் சுப்பர் லீக் போட்டி ; ரட்னம் கழகத்தை இன்று சந்திக்கிறது

September 14, 2026
திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

திருமதி இலங்கை அழகு ராணியின் கிரீடம் பறிப்பு வழக்கு ; கரோலின் ஜூரி, சூலா பத்மேந்திரா விடுதலை

September 14, 2026
ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

ஐ.நாவின் போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழு விஜயம்!

September 14, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures