ஆகாய விமானத்தை இயக்கும் விமானியான கப்தன் அஷ்ரப் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘போட்டோகிராபர் ‘எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் அஷ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போட்டோகிராபர் ‘ திரைப்படத்தில் அஷ்ரப், ஜனனி, ‘ஆடுகளம் ‘நரேன், கருணாகரன், வேல. ராமமூர்த்தி, நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரயீஸ் அஹமத் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜ்குமார் சந்திரசேகரன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ பி எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அப்துல் பாசித் சயீத் தயாரித்திருக்கிறார்.
எதிர் வரும் 17ஆம் திகதி முதல் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் இடம் பிடித்திருக்கும் காட்சிகளும் , உரையாடல்களும் ரசிகர்களை உறைய செய்திருக்கிறது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. மேலும் புதிரும் , மர்மங்களும் நிறைந்த மதி கெட்டான் சோலை எனும் மலை சார்ந்த நிலவியல் பகுதியில் நடைப்பெற்ற சம்பவங்களை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருப்பதால்…இப்படத்தை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்திருக்கிறது.













