Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ட்ராமா – திரைப்பட விமர்சனம்

March 23, 2025
in Cinema, News, முக்கிய செய்திகள்
0
ட்ராமா – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : டேர்ம் புரொடக்ஷன்ஸ்

நடிகர்கள் : விவேக் பிரசன்னா, சாந்தினி தமிழரசன், ஆனந்த் நாக், பூர்ணிமா ரவி, பிரதோஷ், நிழல்கள் ரவி, வையாபுரி மற்றும் பலர்.

இயக்கம் : தம்பித்துரை மாரியப்பன்

மதிப்பீடு : 2/5

ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி பாணியிலான திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு. ஆனால் இதன் திரைக்கதை – படத்தொகுப்பு அடர்த்தியாகவும் , வீரியமிக்கதாகவும் ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தால் பாரிய வெற்றியை பெறும். இந்நிலையில் இந்த பாணியில் தயாராகி இருக்கும் ‘ட்ராமா’ எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

சுந்தர்( விவேக் பிரசன்னா) – கீதா ( சாந்தினி தமிழரசன்) தம்பதிகள் ஒரு கதை- இவர்களுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளாகியும் குழந்தை பேறு இல்லாதவர்கள். வாரிசுக்காக ஏங்குபவர்கள்.

ஜீவா( பிரதோஷம்) – செல்வி ( பூர்ணிமா ரவி) காதலர்கள்-  இது ஒரு கதை. காதலிக்கும் போது நெருங்கி பழகிய பிறகு, காதலன் புதிரானவன்!! என்பதால் காதலனை இழக்கவும் தயாராகிறார்.

தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக சிறிய அளவிலான திருட்டுகளில் ஈடுபடும் இரண்டு திருடர்கள் – இது ஒரு கதை

இந்த மூன்று கதையையும் ஒரு புள்ளியில் இணைப்பது தான் இப்படத்தின் திரைக்கதை.

சுந்தர் தான் ஆண்மையற்றவன் என்பதையும், குழந்தை பெற்றுக் கொள்வதற்கு தகுதியற்றவன் என்ற வைத்திய ரீதியிலான உண்மையையும் மனைவியிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. இதனை தன்னுடைய நண்பர் ரகு( ஆனந்த் நாக்) விடமும் பகிர்ந்து கொள்கிறார். மேலும் இது தொடர்பாக செயன்முறை கருத்தரிப்பு முறையில் சிகிச்சையை பெற விரும்புகிறார்.

பெற்றோல் விநியோகிக்கும் நிலையம் ஒன்றில் ஊழியராக பணியாற்றுகிறார் செல்வி. இவரை விரட்டி விரட்டி காதலிக்கிறார் ஜீவா. ஒரு புள்ளியில் செல்வியை ஜீவா காப்பாற்ற.. அதனால் அவர் மீது நம்பிக்கை வருவதுடன் காதலையும் வளர்த்துக் கொள்கிறாள் செல்வி. இந்த காதலர்கள் அத்து மீறுகிறார்கள். அதனால் செல்வி கருவுறுகிறாள். இந்த விடயம் அவருடைய பெற்றோர்களுக்கு தெரிய வர..’ உயிரை விட மானம் பெரிது ‘ என வாழும் அவர்கள், செல்வியிடம் கருகலைப்பு செய்து கொள்ளுமாறு நிர்பந்திக்கிறார்கள்.

சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் இரண்டு நண்பர்களிடத்தில்,  மெக்கானிக் ஒருவர் ( ஈஸ்வர்) பெரிய அளவில் திருட்டில் ஈடுபடுங்கள் என்று ஆசையை தூண்டுகிறார். இதனால் அவர்கள் சொகுசு கார் ஒன்றை திருடுகிறார்கள். இதனால் அவர்கள் காவலர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். விசாரணையின் போது இந்த அனைத்து கதைகளுக்குமான பின்னணி விவரிக்கப்படுகிறது. வைத்திய உலகில் குறிப்பாக மகப்பேறின்மைக்கான வைத்தியத்தில் இன்று மோசடிகள் அதிகமாகிவிட்டது என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்டிருக்கும் இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே பிடிக்கும்.

இதில் குழந்தை இல்லா தம்பதிகளாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா – சாந்தினி தமிழரசன் ஜோடி-  தங்களுடைய அனுபவம் மிக்க நடிப்பை வழங்கி மனதில் இடம் பிடிக்கிறார்கள். சுந்தரின் நண்பன் ரகு கதாபாத்திரம் – ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் இருப்பதால், எந்த சுவராசியத்தையும் ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ஆனந்த் நாக் நன்றாக நடித்திருக்கிறார். 

இவர்கள் அனைவரையும் விட செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணிமா ரவி அற்புதமாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் யார் இவர்? என கேள்வி எழுப்புகிறார். தனித்துவமான நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார் பூர்ணிமா ரவி. இவருக்கு வளமான எதிர்காலம் தமிழ் சினிமாவில் உண்டு என்று உறுதியாக சொல்லலாம்.

இதுபோன்ற ஆந்தாலஜி படைப்புகளுக்கு படத்தொகுப்பு தான் பலம். அதனை இந்த திரைப்படத்தில் நேர்த்தியாக செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் முகன் வேல். சிறிய முதலீட்டு திரைப்படமாக இருந்தாலும் ஒளிப்பதிவாளர் அஜித் ஸ்ரீனிவாசனும்,  இசையமைப்பாளர் ஆர். எஸ். ராஜ் பிரதாப்பும் தங்களுடைய பங்களிப்பை நேர்த்தியாக வழங்கி ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கிறார்கள்.

ட்ராமா – கோமா.

Previous Post

மாதவன் நடிக்கும் ‘டெஸ்ட் ‘ திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

Next Post

பிள்ளையான் குழுவினர் நால்வருக்கு மரண தண்டனை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Next Post
பிரபாகரனும் பொட்டு அம்மானும் மரணிக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு! | பிள்ளையான்

பிள்ளையான் குழுவினர் நால்வருக்கு மரண தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures