Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அமைச்சுப் பதவியில்லாமல் அரச இல்லத்தில் வசிப்பது வெட்கமடையும் செயற்பாடு – மனுஷ

September 9, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அரச ஊழியர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல்! எடுக்கப்பட்டுள்ள உடனடி நடவடிக்கை

அமைச்சு பதவி ஏதும் வகிக்காத நிலையில் அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்வது ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமையையும் மீறும் செயற்பாடாகும்.

 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுசரனையுடன் தொடர்ந்து அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ்வது வெட்கமடைய வேண்டியதொரு செயற்பாடு என வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (8) இடம்பெற்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து மே 09 சம்பவத்தினால் எனது வீடு தீக்கிரையாக்கப்பட்டது. 

அப்போது நான் சுகாதார  அமைச்சராக பதவி வகித்தேன். கொழும்பு 07 உள்ள அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசித்தேன். பதவி விலகியதன் பின்னர் எனக்கு நீதி கிடைக்கும் வரை அந்த வீட்டில்  வசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு உரிய தரப்பினரிடம் வலியுறுத்தினேன்.

அமைச்சு பதவியில் இருந்து விலகியதன் பின்னர் தொடர்ந்து அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினர் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் இவ்விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

அதற்கமையவாகவே நான் அந்த இல்லத்தில் வசிக்கிறேன்.இவ்விடயம் தொடர்பில்  பல்வேறு தரப்பினர் பொய்யான கருத்துக்களை தெரிவித்துள்ளதால் எனது கௌரவத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன்,பாராளுமன்ற  சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது என்றார்.

இதனை தொடர்ந்து எழுந்து உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணக்கார அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் ஒருவர் பதவி வகிக்கும் போது மாத்திரமே அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில்  வசிக்க முடியும். பதவி விலகியதன் பின்னர் தொடர்ந்து அரச உத்தியோகப்பூர்வ இல்லத்தில் வசிக்க முடியாது. அமைச்ச பதவி வகிக்காத நிலையில் அரச இல்லத்தில் வகிப்பது ஒட்டுமொத்த மக்களின் சிறப்புரிமையை மீறும் ஒரு செயற்படாகும். இது வெட்கப்பட வேண்டியதொரு செயற்பாடாகும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தவறான விடயங்களை குறிப்பிட வேண்டாம்.மே 09 ஆம் திகதி ஆளும் தரப்பினரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட போது எனது வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்ட ஈடு வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது நான் அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டதால் எனக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை இழுத்தடிக்கப்பட்டது.இதற்கு எதிராகவே நான் மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடினேன் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார பைத்தியம் கலக்கமடைந்தால் வைத்தியர்கள் கலக்கமடைவதில்லை என்று குறிப்பிடுவார்கள். இவரை வைத்தியர் என்கிறார்கள்.ஆனால் இவர் ஒரு பைத்தியம்,அதனால் தான்  தொப்பியை எடுத்து போட்டுக் கொள்கிறார் என்றார்.

இதன்போது மீண்டும் உரையாற்றிய சன்ன ஜயசுமன மனித குலம் மூளையை முறையாக பாவித்து செயற்பட வேண்டும்.அறிவை பயன்படுத்த முடியாதவர்கள் பாராளுமன்றத்தில் இருப்பது எமது தவறு அல்ல என்றார்.

Previous Post

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை | ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை வலியுறுத்தல்

Next Post

அவுஸ்திரேலியாவில் பொதுமக்கள் மீது காரால் மோதிய சம்பவம் | பயங்கரவாதம் இல்லை என காவல்துறை தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures