Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக 2 ஆம் சுற்றுக்கு தகுதிபெறும் அணியைத் தீர்மானிக்கும் போட்டிகள் இன்று

December 1, 2022
in News, Sports, முக்கிய செய்திகள்
0
சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக 2 ஆம் சுற்றுக்கு தகுதிபெறும் அணியைத் தீர்மானிக்கும் போட்டிகள் இன்று

France poses for photos ahead of the Qatar 2022 World Cup Group D football match between France and Australia at the Al-Janoub Stadium in Al-Wakrah, south of Doha on November 22, 2022. (Photo by Anne-Christine POUJOULAT / AFP)

கத்தாரில் நடைபெற்றுவரும் 2022 பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் நொக்-அவுட் சுற்றுக்கு முதலாவது அணியாக தகுதிபெற்ற நடப்பு சம்பியன் பிரான்ஸ் சி குழுவுக்கான முதல் சுற்றின் கடைசிக் கட்டப் போட்டியில் டியூனிசியாவை எட்யூகேஷன் சிட்டி விளையாட்ரங்கில் சந்திக்கவுள்ளது.

இதே குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான போட்டி அல் ஜனூப் விளையாட்டரங்கில் நடைபெறும்.

இந்த இரண்டு போட்டிகளும் இன்று புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு ஏககாலத்தில் ஆரம்பமாவுள்ளது.

பிரான்ஸை பொறுத்தமட்டில் டியூனிசியாவுடான இன்றைய போட்டி பெரிய சவாலுக்குரியதாகவோ அழுத்தம் கொடுக்கக்கூடியதாகவோ அமையப் போவதில்லை.

ஏற்கனவே அவுஸ்திரேலியாவையும் டென்மார்க்கையும் வெற்றிகொண்டுள்ள பிரான்ஸ் தனது குழுவில் முதலாம் இடத்தை தக்கவைக்க டியூனிசியாவுடனான போட்டியில் வெற்றிதோல்வியற்ற முடிவு ஒன்றே போதும்.

இரண்டாம் சுற்றுக்கு ஏற்கனவே தெரிவாகியுள்ள பிரான்ஸ் தனது வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் கோடுக்காமல் இன்றைய போட்டியில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கவுள்ளது.

இதன் காரணமாக 2ஆம் சுற்றக்கு முன்னர் பிரதான வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிரான்ஸ் பயிற்றுநர் டிடியர் டெஸ்சாம்ப்ஸ் எண்ணியுள்ளார்.

‘பிரேஸில், போர்த்துக்கல் போன்று எமது அணியும் 2ஆம் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. எனவே வீரர்களை மாற்றுவதற்கு எங்களுக்கு சந்தர்ப்பம் தொன்றியுள்ளது. எனினும் இந்த மூன்றாவது போட்டியை நாங்கள் எவ்வகையிலும் குறைத்து மதிப்பிடப்போவதில்லை’ என டெஸ்சாம்ப்ஸ் கூறினார்.

‘வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத போதிலும் அதிசிறந்த பெறுபேறை பதிவு செய்வதற்கே நாங்கள் விரும்புகிறோம்.

மறுபுறத்தில் பிரான்ஸை பிறப்பிடமாகக்கொண்ட 10 வீரர்களை தனது குழாத்தில் கொண்டுள்ள டியூனிசியா, அடுத்து சுற்றுக்கு செல்வதாக இருந்தால் இன்றைய போட்டியில் வெற்றிபெற்றாக வேண்டும். எனினும் அவுஸ்திரேலியா – டென்மார்க் போட்டி முடிவும் அதன் தலைவிதியை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

இதற்கு முன்னர் பிரான்ஸை ஒருபோதும் டியூனிசியா வெற்றிகொண்டதில்லை. இதன் காரணமாக இன்றைய போட்டியில் டியூனிசியாக சாதிக்கும் என எதிர்பார்க்கமுடியாது.

எனினும் தனது வீரர்களை டியூனிசியா பயிற்றுநர் ஜலீல் காத்ரி உற்சாகப்படுத்தி வருகிறார்.

‘முடியாது என்று எதுவும் கிடையாது என்ற செய்தியை எனது வீரர்களுக்கு கெர்டுக்க விரும்புகின்றேன். இரண்டாம் சுற்றுக்கு செல்ல எமக்கு வாய்ப்பு இன்னும் இருக்கவே செய்கிறது’ என ஜலீல் காத்ரி குறிப்பிடிட்டார்.

அவுஸ்திரேலியா – டென்மார்

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டதில் சி குழுவில் பிரான்ஸுக்கு அடுத்ததாக இரண்டாவது அணியாக நொக்-அவுட் சுற்றில் விளiயாடத் தகுதிபெறும் அணி எது என்பதைத் தீர்மானிக்கும் போட்டியில் அவுஸ்திரேலியாவும் டென்மார்க்கும் இன்று இரவு மோதவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் இரண்டாவது தடவையாக 2ஆம் சுற்றுக்கு செல்வதற்கான நுழைவாயிலில் இருக்கும் அவுஸ்திரேலியாவுக்கு இன்றைய போட்டியில் வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் கிரிக்கெட், றக்பி ஆகிய இரண்டு விளையாட்டுகளுக்கு அடுத்தே கால்பந்தாட்டம் இருக்கின்றபோதிலும் கால்பந்தாட்டமே நாட்டை ஐக்கியப் படுத்துவதாக பயிற்றுநர் கிறஹாம் ஆர்னல்ட் தெரிவித்தார்.

எனவே 2 வருடங்களுக்கு முன்னர் யூரோ கிண்ண அரை இறுதியில் விளையாடிய டென்மார்க்கை வெற்றிகொள்வது அவுஸ்திரெலியாவுக்கு இலகுவாக அமையப் போவதில்லை.

பிரான்ஸிடம் படுதோல்வி (1 – 4)அடைந்த அவுஸ்திரேலியா, டியூனிசியாவை (1 – 0) வெற்றிகொண்டிருந்தது. மறுபுறத்தில் பிரான்ஸிடம் தோல்வி (1 – 2) அடைந்த டென்மார்க், டியுனிசியாவுடனான போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது. எனவே இந்த இரண்டு அணிகளின் பெறுபேறுகளைக் கொண்டு எந்த அணி வெற்றிபெறும் என அனுமானிக்க முடியாது.

என்றாலும் இந்த இரண்டு அணிகளும் 2ஆம் சுற்றுக்கு செல்லவேண்டும் என்ற வைராக்கியத்துடன் விளையாடவிருப்பதால் இந்தப் போட்டி விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

Previous Post

அசோக் செல்வன் நடிக்கும் ‘எஸ்டேட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

மற்றைய அணிகளை விட பலசாலி என்பதை நிரூபித்து சம்பியனான இளவாளை புனித ஹென்றியரசர்

Next Post
மற்றைய அணிகளை விட பலசாலி என்பதை நிரூபித்து சம்பியனான இளவாளை புனித ஹென்றியரசர்

மற்றைய அணிகளை விட பலசாலி என்பதை நிரூபித்து சம்பியனான இளவாளை புனித ஹென்றியரசர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாமலுக்கு விளக்கமறியல்! நீதிமன்ற வளாகத்தில் அர்ச்சுனா எம்.பி

அநுராதபுரத்தில் ஆரம்பமான மொட்டுவின் மக்கள் பேரணி : அர்ச்சுனா எம்.பியும் பங்கேற்பு

September 12, 2026
பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

பாகிஸ்தானை 4 விக்கெட்களால் வெற்றி கொண்ட இலங்கை இறுதிப் போட்டியில் இந்தியாவை  சந்திக்கவுள்ளது

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு

September 12, 2026
அரச கபடத்திற்கு இடமளியாது காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டிற்கு ஒத்துழைப்போம் – தவிசாளர் நிரோஷ்

இவ் ஆட்சியிலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டு விட்டார்கள் – சாவகச்சேரி போராட்டத்தில் தவிசாளர் நிரோஷ்

September 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures