கொண்டாவில் கிழக்கு ஞானப்பழனி முருகன் ஆலய வரலாற்றினை உண்மைக்கு நெருக்கமாக ,மக்கள் சமய நோக்கில் நின்று எழுதப்பட்ட புதிய திருத்தலவரலாற்று நூலை வெளியிட்டு வைப்பதில் பெருமகிழ்ச்சியடைகின் றேன் .செப்பமான வரலாற்றுப்பதிவுகள்,பண்பாட்டின் செல்நெறியை வழிப்படுத்தும் மூலவிசைகளாகும்
அண்மையில் நடைபெற்ற மேற்படி ஆலய மூன்றாவது திருக்குட நன்னீராட்டு பெருவிழாவினையொட்டிய பரிபாலனசபையினரின் திருத்தலவரலாறு -நூல் வெளியீட்டின் முதன்மைவிருந்தினராய் யாழ்ப்பாணப்பல்கலைகழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் என். சண்முகலிங்கன் கலந்து சிறப்பித்தார். ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ ரவீந்திரராசக்குருக்கள் முன்னிலையில் ஆலய பரிபாலனசபை செயலாளர் திரு .வி. மதிசங்கர் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் யாழ்ப்பாணப்பல்கலைக்கழக சட்டத்துறைத்தலைவி திருமதி துஷானி சயந்தன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். நூலாக்கத்தில் பெரிதும் உழைத்த ஓவியக்கலைஞர்,கவிஞர் தவ .தஜேந்திரன் சிறப்புப்பிரதிவழங்கி கௌரவிக்கப்பட்டார். ஆலயபிரதமகுரு ,பரிபாலனசபைத்தலைவர் ஆகியோரினால் முதன்மைவிருந்தினர் கௌரவிப்பு இடம்பெற்றது.





