பயமுறுத்தலை தொடர்ந்து ரொறொன்ரோ உயர்தர பாடசாலை வெளியேற்றம் செய்யப்பட்டது.

கனடா-எற்றோபிக்கோ தெற்கில் அமைந்துள்ள லேக்க்ஷோர் கல்லூரி மாணவர்கள் தற்காலிகமாக அருகாமையில் உள்ள பொலிஸ் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். பாடசாலைக்கு எதிரான பயமுறுத்தல் ஒன்றே காரணமாகும்.
350-கிப்லிங் அவெனியுவில் அமைந்துள்ள பாடசாலைக்கு வெள்ளிக்கிழமை காலை 8.38-மணிக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட 600மாணவர்கள் 1.4கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள பொலிஸ் கல்லூரிக்கு அனுப்பபட்டதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை என தெரிவித்த பொலிசார் பயமுறுத்தல் குறித்து தெளிவுபடுத்தவில்லை.
ஆபத்து எதுவும் இல்லை என பொலிசார் கண்டறிந்த பின்னர் பிற்பகல் 1.30மணிக்கு மாணவர்கள் பாடசாலைக்கு திரும்பினர்.











