தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டி மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
மன்னார் இரட்டை மாட்டு வண்டி சவாரி சங்கத்தின் ஏற்பாட்டில், ஏ.கே.ஆர். நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் நேற்று (சனிக்கிழமை) மாலை 1.30 மணியளவில், முருங்கன், பிச்சைகுளம் இரட்டை மாட்டு வண்டி சவாரித்திடலில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது.
மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களையும் உள்ளடக்கி 64 ஜோடி காளைகள் குறித்த போட்டியில் பங்குப்பற்றின.
குறித்த இரட்டை மாட்டு வண்டி சவாரிப் போட்டியானது ‘A,B,C,D,E’ஆகிய 5 பிரிவுகளில் நடை பெற்றது.
இதன்போது இப்போட்டியில் ‘A,B’ஆகிய இரு பிரிவுகளிலும் மன்னார் மாவட்ட காளைகளும், ‘C’ பிரிவில் கிளிநொச்சி காளைகளும், ‘D,E’பிரிவுகளில் யாழ்ப்பாணக் காளைகளும் வெற்றி பெற்றன.
வெற்றி பெற்ற காளைகளுக்கும் உரிமையாளர்களுக்கும் ஏ.கே.ஆர். (A.K.R & SON,S) நிறுவனத்தினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

