Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த நபர்

June 30, 2021
in News, World
0
41 ஆண்டுகள் காட்டுக்குள் வாழ்ந்த நபர்

வியட்நாமின் காடுகளில் வெளியுலக வாசனையே இல்லாமல், அதுவும் மனிதர்களில் பெண் பாலினம் குறித்த புரிதலே இல்லாமல் தனது தந்தை மற்றும் சகோதரனுடன் 41 ஆண்டுகளாக ஒரு மனிதர் வாழ்ந்துள்ளார்.

அவரை ‘நிஜ டார்ஜன்’ என அழைக்கிறார்கள். காரணம் டார்ஜன் வனமும் வனம் சார்ந்தவை மட்டுமே அறிந்த கலைப்படைப்பு கதாபாத்திரமாகும்.

அந்தக் கதாபாத்திரம் போலவே நிஜ வாழ்க்கையில் 41 ஆண்டுகள் அடர் காட்டுக்குள் விலங்குகளுடன் ஹோ வான் லாங் என்ற குறித்த  நபர் வாழ்ந்துள்ளார்.

தற்போது 49 வயதாகும் ஹோ வான், விவரம் தெரியாத சிறுவயதில் வியட்நாமின் நகர பகுதிகளில்தான் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

1972-ஆம் ஆண்டு வியட்நாம் போரின்போது அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில், ஹோ வான் குடும்பம் முற்றிலும் சிதைந்துள்ளது.

அவரின் தாயும், உடன் பிறந்தவர்கள் இருவரும் அந்தத் தாக்குதலில் பலியாகினர். அதன்பின்னர் விவரம் தெரியாத ஹோ வான் மற்றும் அவரின் மற்றொரு சகோதரரை தூக்கிக்கொண்டு நாகரிக வாழ்க்கையாக நினைத்துக்கொண்டிருந்த நகர வாழ்க்கையை விட்டு வெளியேறி குவாங் நங்கை மாகாணத்தின் டே டிரா மாவட்டத்தில் உள்ள அடர் காட்டில் குடியேறியிருக்கிறார் அந்தக் குழந்தைகளின் தந்தை.

இந்த 41 ஆண்டு வாழ்க்கையில் முற்றிலும் காட்டில் வாழ்ந்து, அங்கு கிடைத்த தேன், பழம் மற்றும் வன உயிரினங்களை சாப்பிட்டு, தங்குமிடங்களை கட்டியெழுப்பி தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டுள்ளனர் அந்த மூவரும்.

நான்கு தசாப்தங்களில், அவர்கள் மற்ற ஐந்து பேரை மட்டுமே பார்த்துள்ளார்களாம். ஒவ்வொரு முறையும் ஒருவர் கண்ணில் படும்போது தங்கள் வசித்த பகுதியை காலி செய்துவிட்டு வேறு இடத்தில் வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையேதான் 2013 ஆம் ஆண்டு இவர்களை வன வாழ்க்கையிலிருந்து மீட்டெடுத்து அருகில் உள்ள கிராமத்தில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.

அங்கு, அவர்கள் மெதுவாக நாகரிக வாழ்க்கைக்கு ஏற்றவாறு மாறத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போது காட்டுக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வசிக்க்கும் இந்த குடும்பத்தை அல்வாரோ செரெஸோ என்ற புகைப்படக் கலைஞர் நேரில் சந்தித்து பேட்டியெடுத்துள்ளார்.

அவர்களின் அனுபவம் தொடர்பாக பேசியிருக்கும் அல்வாரோ செரெஸோ, ”ஹோ வான்னின் தந்தை வியட்நாம் போர் முடிந்துவிட்டது என்பதை நம்பவில்லை. அவருக்கு நகரத்துக்கு திரும்புவதற்கான பயம் இருந்ததால் நகரத்துக்கு வரவில்லை. இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், காடுகளில் வசிக்கும்போது ஹோ வான்னுக்கு பெண்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் இருந்துள்ளது.

இன்றும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் அவரால் வேறுபாடு காண முடிந்த போதிலும், அவர்களுக்கு இடையேயான அத்தியாவசிய வேறுபாட்டை இன்னும் முழுமையாக அறியாமல் இருக்கிறார். லாங்கிற்கு ஒருபோதும் குறைந்தபட்ச பாலுறவு விருப்பம் கூட இல்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

ஹோ வான் லாங்கின் தந்தை தனது மகன்களிடம் பாலியல் பற்றி ஒருபோதும் சொல்லவில்லை. அவரது தந்தையின் உடல்நிலை மோசமடையத் தொடங்கும் வரை ஹோ வான்னின் வாழ்க்கை நன்றாக இருந்தது. தனது தந்தையின் மோசமான மனநிலை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக மன அழுத்தமும் பதற்றமும் நிறைந்தவராக வாழ்ந்து வருகிறார். தனது முழு வாழ்க்கையையும் காட்டில் கழித்ததால் பல அடிப்படை சமூகக் கருத்துகளைப் புரிந்துகொள்ளவில்லை.

நான் யாரையாவது அடிக்கச் சொன்னால், ஹோ வான் அதைச் செய்வார். நல்லதுக்கும் கெட்டதுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியாது. ஹோ வான் ஒரு குழந்தை மட்டுமே. அவருக்கு எதுவும் தெரியாது” என்று ஹோ வானின் நிலையை எடுத்து பேசியிருக்கிறார்.

Previous Post

துமிந்த சில்வாவை விடுவிக்கலாம் என்றால் ஏன் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது?

Next Post

ஒருநாள் தொடரிலும் மாஸ் காட்டும் இங்கிலாந்து ; 5 விக்கெட்டுகளால் வெற்றி

Next Post
ஒருநாள் தொடரிலும் மாஸ் காட்டும் இங்கிலாந்து ; 5 விக்கெட்டுகளால் வெற்றி

ஒருநாள் தொடரிலும் மாஸ் காட்டும் இங்கிலாந்து ; 5 விக்கெட்டுகளால் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026

Recent News

முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

நாமலுக்கு எதிரான கிரிஷ் வழக்கு : ஜூலை மாதத்திற்கு ஒத்திவைப்பு

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures