Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2,500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிப்பு

May 23, 2018
in News, Politics, World
0

இலங்கையில் ஒரு வருடத்துக்கு 2500 புதிய வாய்ப் புற்று நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதாகவும், இவர்களுக்காக வேண்டி இலங்கை அரசாங்கம் 2 இலட்சத்து 50 ஆயிரம் மில்லியன் ரூபாவினை செலவு செய்துவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல் மற்றும் முகத்தாடை சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் அனுஷன் மதுஷங்க தெரிவித்தார்.

பல் மற்றும் முகத்தாடை புற்றுநோய் தொடர்பான மாபெரும் இலவச வைத்திய முகாமும், குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும் நேற்று (22)மட்டக்களப்பு வாகநேரியில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாயில் ஏற்படும் புற்று நோய் தெற்காசிய நாடுகளில் அதிகரித்து வருவதாவும், இந்த நோய்க்கு சிகிச்சையை பெற்றுக்கொள்ள காலதாமதமாவதால் உலகில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாவும் கூறினார்.

இந்த வாய்ப் புற்றுநோயானது 25 விதமானவை வெளியேயும், 75 விதமானவை உள்ளேயும் காணப்படுகின்றன. இந்த நோயுள்ளவர்கள் மிக இலகுவில் இதனை அடையாளம் கண்டுகொள்ளமாட்டார்கள். இவர்கள் வேறு வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வரும்போதுதான் அவர்களுக்கு வாய்ப் புற்றுநோய் இருப்பதை வைத்தியர்கள் மூலம் அறிந்துகொள்கின்றார்கள்.

இவ்வாறு வருகின்றவர்களின் வாய்ப் புற்றுநோயை முற்று முழுதாக இல்லாமல் செய்யமுடியாது, ஓரளவுதான் குனமாக்கலாம். இதனை ஆரம்பத்தில் அடையாளம் கண்டு அதற்கான வைத்திய சிகிச்சையை பெற்றுக்கொள்வார்களானால் அதனை முற்று முழுதாக குனமாக்கலாம்.

வாயில் ஏற்படும் கொப்புளங்கள் ஆறாமல் குறைந்தது 10 நாட்களாவது இருக்குமாக இருந்தால், வாயில் இருந்து ரத்தக்கசிவு ஏற்பட்டால், வெள்ளை அல்லது சிவப்பு நிற புள்ளிகள் வாயின் உட்புறத்தில் காணப்பட்டால், நாக்கின் அடியில் சிறுகட்டிகளும், வாயின் மேற்புறத்தில் சிறு புண்களுடனான வீக்கம் காணப்படல் போன்றன இதற்கான அறிகுறிகளாக காணப்படும். இவ்வாறு காணப்பட்டால் உடனடியாக வைத்தியரைச் சந்தித்து அதற்கான வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு சிகிச்சையை பெற்றுக்கொள்வதன் மூலம் நாட்டில் ஒரு சிறந்த பிரஜையாக வாழலாம் என்றும் ஒரு வருடத்தில் அடையாளம் காணப்படுகின்ற 2500 வாய்ப் புற்றுநோயாளர்களில் 1000 பேரை இதிலிருந்து பாதுகாக்க முடியும் என்றார்.

இதில் வைத்தியர்களான மட்டக்களப்பு பிராந்திய பல் வைத்திய நிபுணர் வைத்தியர் எம்.பி.அப்துல் வாஜீத், கிருஷாந்தி கேதீஸன், ப.துஷிதா, கே.மேகனாதான், கே.முரளிதரன், எஸ்.கலைச்செல்வன், கே.ஏ.என்.நதிஸானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வைத்திய பரிசோதனையில் ஈடுபட்டனர்.

Previous Post

காலநிலை காரணமாக மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Next Post

அரசியல் கைதிகள் விவகாரம் : மெளனம் காக்கும் அரசு

Next Post

அரசியல் கைதிகள் விவகாரம் : மெளனம் காக்கும் அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures