Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2028 ரி20 உலகக் கிண்ணத்துக்கு 2026 சுப்பர் 8 அணிகள் தகுதி

February 20, 2026
in News, Sports, முக்கிய செய்திகள்
0
2028 ரி20 உலகக் கிண்ணத்துக்கு 2026 சுப்பர் 8 அணிகள் தகுதி

இந்தியாவிலும் இலங்கையிலும் கூட்டாக நடத்தப்பட்டுவரும் பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சுப்பர் 8கள் சுற்றில் விளையாட தகுதிபெற்ற 8 அணிகள் 2028 ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட நேரடி தகுதிபெற்றுள்ளன.

2028 ரி20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியை நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் அவுஸ்திரேலியாவும் நியூஸிலாந்தும் ஏற்கனவே அப் போட்டியில் விளையாடுவதை உறுதிசெய்துகொண்டிருந்தன.

இதற்கு அமைய சுப்பர் 8கள் சுற்றுக்கு ஏ குழுவிலிருந்து தகுதிபெற்ற இந்தியா, பாகிஸ்தான், பி குழுவிலிருந்து தகுதிபெற்ற ஸிம்பாப்வே, இலங்கை, சி குழுவிலிருந்து  தகுதிபெற்ற   மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, டி குழுவிலிருந்து  தகுதிபெற்ற   தென் ஆபிரிக்கா, நியூஸிலாந்து ஆகியன 2028 ரி20 உலகக் கிண்ணத்தில் விளையாட நேரடி தகுதிபெற்றுக்கொண்டன.

South Asians & Diaspora

வரவேற்பு நாடு என்ற வகையில் அவுஸ்திரேலியா தகுதிபெற்றுக்கொண்டுள்ளது.

2028 ரி20 உலகக் கிண்ணத்துக்கு நேரடி தகுதிபெறவுள்ள மற்றைய 3 நாடுகள் 2026 ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் மார்ச் 9ஆம் திகதி நிறைவடைந்ததும் தீர்மானிக்கப்படும். தரவரிசையில் 10, 11, 12ஆம் இடங்களைப் பெறும் அணிகள் அடுத்த உலகக் கிண்ணத்தில் பங்குற்ற நேரடியாக பங்குபற்ற தகுதிபெறும்.

மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இல்லாததாலும் தரவரிசையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லாததாலும் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகியன 

அந்த மூன்று இடங்களை நிரப்பும் என நம்பப்படுகிறது.

மற்றைய எட்டு இடங்கள் பிராந்திய தகுதிகாண் சுற்றுகளில் பங்குபற்றும் 20 அணிகளிலிருந்து தெரிவாகும்.

Previous Post

கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிரான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாதது ஏன்? 

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures