Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபய ராஜபக்ஷக்கு எதிரான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாதது ஏன்? 

February 20, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலப்பகுதியில், அவர் அரச நிதியை மோசடி செய்து, தனது தாயின் கல்லறை அமைத்தார் என்ற குற்றச்சாட்டுக்கு எதிராக, தொடுக்கப்பட்ட வழக்கு, அவர் ஜனாதிபதியானதும் அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது.

தற்போது அந்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்ய முடியுமாகி இருக்கின்றபோதும் ஏன் அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிரான குறித்த வழக்கை மீண்டும் தாக்கல் செய்யாமல் இருக்கிறது என அஜித் பி ரேரா,  வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் வாய்மூல  விடைக்கான மேலதிக வினாவின் போது கேட்ட கேள்விக்கு நீதி அமைச்சர் பதிலளிக்க மறுத்ததால், சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அஜித் பிரேரா  தனது மேலதிக கேள்வியின்போது, 2018ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில், அரச நிதியில் தனது தாயின் கல்லறை அமைத்தார் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், பிரதிவாதி நோய்வாய்ப்பட்டு வெளிநாடு சென்றார். சில காலம் சென்றபின்னர் மீண்டும் நாட்டுக்கு வந்தார். அதன் பின்னர் நாட்டின் ஜனாதிபதியானார்.

அவர் ஜனாதிபதியான  மறுதினமே, ஜனாதிபதிக்கு உரிய சிறப்புரிமைக்கமைய அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது. தற்போது கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அந்த சிறுப்புரிமை இல்லை. அதனால் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு மூவரடங்கிய நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், பாதியளவு முடிவுக்கு வந்த நிலையில் வாபஸ்பெறப்பட்ட அந்த வழக்கை அரசாங்கம் மீண்டும் ஏன் ஆரம்பிக்காமல் இருக்கிறது.?

அதனால் அரச பணத்தை  மோசடி செய்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவந்த இந்த வழக்கை மீண்டும்,  ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் சட்டமா அதிபருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார்.

அதற்கு நீதி அமைச்சர்  பதிலளிக்கையில், இந்த கேள்வி  பிரதான கேள்வியுடன் தொடர்புபடாததால், இந்த கேள்விக்கு பதிலளிக்க முடியாது என்றார்.

அதற்கு அஜித் பி ரேரா எம்.பி. அப்படியானால் இவர்கள் தங்களுக்கு தேவையான வழக்குகளை தெரிவு செய்தே வழக்கு தொடுக்கின்றார்கள். அத்துடன் அரச நிதி மோசடி செய்த தனவந்தர்களுக்கு எதிராக வழக்கு தொடுத்து அவ்வாறானவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதாகவும் வாபஸ் பெறப்பட்ட இவ்வாறான 42 வழக்குகள் இருக்கின்றன. அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வதாக  ஜனாதிபதி மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன் அவர்களுக்கு  அரசாங்கம் பயமா? அல்லது அவர்களுடன் ஏதாவது டீல் இருக்கிறதா என கேட்கிறேன் என்றார்.

அதற்கு நீதி  அமைச்சர் பதிலளிக்கையில், பிரதான கேள்விக்கு ஏற்புடைய மேலதிக கேள்விகளுக்கு பதலளிக்க தயார். ஆனால் சம்பந்தமில்லாத கேள்விக்கு பதிலளிக்க நான் கடமைப்படவில்லை. அதேநேரம் கோட்டாபய ராஜபக்ஷ் அதிகாரத்தில் இருக்கும்போது கட்டிலுக்கு கீழ் ஒழிந்திருந்தவர்கள் தற்போது வீரர்கள்போல் கதைக்கின்றனர் என்றார்.

இதன்போது  பிரதான எதிர்க்கட்சிக்கும் ஆளும் தரப்புக்குமிடையில் சபையில் கடுமு வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியாக சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சபையை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்து சபை நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தார்.

Previous Post

முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகள் அதிகரிப்பு

Next Post

2028 ரி20 உலகக் கிண்ணத்துக்கு 2026 சுப்பர் 8 அணிகள் தகுதி

Next Post
2028 ரி20 உலகக் கிண்ணத்துக்கு 2026 சுப்பர் 8 அணிகள் தகுதி

2028 ரி20 உலகக் கிண்ணத்துக்கு 2026 சுப்பர் 8 அணிகள் தகுதி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

கனடா – பொஸ்னியா மற்றும் ஹேர்ஸிகோவினா உலகக் கிண்ணப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவு

June 14, 2026
சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

சஹ்ரானை உருவாக்கிய சிந்தனைகள் இன்னும் நாட்டில் செயற்படுகின்றன ; ஞானசார தேரர் குற்றச்சாட்டு

June 13, 2026
எரிபொருள் விநியோகத்திற்கு QR நடைமுறைப்படுத்துங்கள் | அதிபர் சங்கம் ஐனாதிபதியிடம் கோரிக்கை

எரிபொருள் மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு | விலை அதிகரிப்பு பற்றி இன்னும் முடிவில்லை!

June 13, 2026
கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

கொலையாளிகளும் ஊழல்வாதிகளும் உத்தமர்களாக வர இடமளிக்க மாட்டோம் | பேராயர்

June 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures