ஹையேஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இன்று அதிகாலை 4:25 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹையேஸ் வாகனம் நாவற்குழிப் பகுதியில் மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.