இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கிய படம் சார்லி சாப்ளின். 2002ம் ஆண்டு வெளியான இந்தப்படம் பெரும் வெற்றி பெற்றது. பல மொழிகளில் ரீமேக் ஆனது. பிரபுதேவா, பிரபு, அபிராமி, காயத்ரி ரகுராம் நடித்திருந்தார்கள். 17 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்கினார் ஷக்தி சிதம்பரம். இதிலும் பிரபுதேவாவும், பிரபுவும் நடித்தனர். நிக்கி கல்ராணி, அதா சர்மா ஹீரோயின்கள்.
இந்தப்படம் கடந்த வாரம் வெளியானது. இருவிதமான விமர்சனங்கள் வந்தபோதும், திருப்தியான வசூலை கொடுத்தது. இந்த நிலையில் இந்தப் படத்தை ஷக்தி சிதம்பரம் இந்தியில் ரீமேக் செய்கிறார். ஷக்தி சிதம்பரமே இயக்குகிறார்.
பிரபுதேவா கேரக்டரில் சல்மான்கான் நடிக்கிறார். பிரபு கேரக்டரில் நடிக்க சினியர் நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதோடு படத்தின் 3வது பாகத்தையும் இயக்க இருக்கிறார் சக்தி சிதம்பரம், இதிலும் பிரபுதேவா, பிரபு நடிக்கிறார்கள்.