மதுரை பக்கம் சிறிய கிராமத்திலிருந்து சின்னத்திரைக்கு வந்தவர் ராமர். இன்றைய தேதியில் விஜய் டிவியின் நட்சத்திர நடிகர். நடிப்பு, மிமிக்ரி, நடனம், பாடல் என சகலகலா வல்லவராக அசத்திக் கொண்டிருக்கிறார். அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது, சிரிச்சா போச்சு உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் விஜய் டி.வி ராமர் வீடு என்ற புதிய நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருக்கிறது. ராமர் வீட்டில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள்தான் கான்செப்ட். இதில் அறந்தாங்கி நிஷா ராமரின் மனைவியாகவும், ஆதேஷ் மகனாகவும், யோகி அம்மாவாகவும் நடிக்கிறார்கள். மா.பா.கா.ஆனந்த் பக்கத்து வீட்டுகாரராக நடிப்பதுடன் நிகழ்ச்சி தொகுப்பாளரும் அவர் தான். ஒவ்வொரு எபிசோடிலும் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். வருகிற 3ந் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.