விஷால், சமந்தா, அர்ஜூன் நடிப்பில் உருவாகியுள்ள படம் இரும்புத்திரை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இது அவருக்கு 125வது படமாகும். மித்ரன் இயக்கியுள்ள இப்படம் மே 11-ந்தேதி திரைக்கு வருகிறது. இப்படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் வெளியாகிறது.
மேலும், இந்த இரும்புத்திரை படத்தை ரிலீசுக்கு இரண்டு நாட் களுக்கு முன்னதாகவே படத்தின் முதல் பாதியை மீடியாக்களுக்கு திரையிட்டு வித்தியாசமான முறையில் பப்ளிசிட்டி செய்யப்போகிறாராம் விஷால். அதன் பிறகு ரிலீஸ் அன்று இரண்டாவது பாதியை மீடியாக்களுக்கு காண்பிக்கிறாராம்.
பெரும்பாலும் ஹாலிவுட்டில்தான் இதுபோன்று முதல் பாதியை மீடியாக்களுக்கு முன்பே திரையிட்டு காண்பித்து பப்ளிசிட்டி செய்வார்களாம். அந்த பாணியை இரும்புத்திரை மூலம் தமிழில் செயல்படுத்துகிறார் விஷால்.