வரவு செலவுத் திட்டத்தின் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ ல.சு.கட்சியானது வாக்கெடுப்பிலிருந்து விலகியிருப்பது ஸ்ரீ ல.சு.கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைக்கு பாரியதொரு தடைக்கலாகும் என பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட முதற் கட்ட வாக்கெடுப்பில் ஸ்ரீ ல.சு.க. உறுப்பினர்கள் வாக்களிக்காது தவிர்ந்து கொண்டனர். எதிர்க் கட்சியில் இருப்பதாக தெரிவித்து விட்டு இவ்வாறு செயற்படுவது புதிராகவுள்ளது.
நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது. ஸ்ரீ ல.சு.கட்சியின் இவ்வாறான நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு தடைக்கல்லாக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

