பொதுவாகவே நடிகர் அஜித் எங்கும் வெளியில் அவ்வளவாக தலை காட்டாவிட்டாலும் அவர் வந்துசெல்லும் இடங்களில் எல்லாம் அவர் மிக எளிமையாக நடந்து கொள்வதை நாம் பார்த்து வருகிறோம். அவர் மட்டுமல்ல, அவரை பின்பற்றியோ அல்லது இயல்பாகவே அவரது மனைவி ஷாலினியும் ஆடம்பரங்களை பெரிதாக விரும்பாமல் எளிமையை கடைபிடித்து வருகிறார்.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஷாலினியை சந்தித்த அஜித் ரசிகர் ஒருவர், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார். அப்போது அஜித்தின் மகன் ஆத்விக்கும் ஷாலினியுடன் இருந்தார். இந்த புகைப்படத்தில் ஷாலினி தனது கையில் பழைய நோக்கியா 1100 மாடல் மொபைல்போனை வைத்திருப்பது நன்றாகவே தெரிகிறது.