தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளை தாண்டியும், 35 வயதை தாண்டியும் இன்னும் டாப்பில் இருக்கிறார் நடிகை த்ரிஷா. ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் ஹீரோவுடன் டூயட் பாடிய த்ரிஷா, சமீபகாலமாக கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். அதிலும் கடந்த ஆண்டு வெளியான 96 படம் அவருக்கு இன்னும் புகழை பெற்று தந்தது. 96 படத்திற்கு பிறகு தமிழக மக்கள் அவரை ஜானுவாக கொண்டாடி வருகிறார்கள்.
த்ரிஷா, தென்னிந்திய நடிகைகளிலேயே சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்புடன் செயல்படுகிறவர். அவரது டுவிட்டர் கணக்கில் தினசரி அப்டேட் இருக்கும். தெரு நாய்களை பாதுகாத்தல், புற்று நோய் விழிப்புணர்வு என அவரது டுவிட்டரில் இடம் பெறும். தனது படங்களையும் அடிக்கடி புரொமோஷன் செய்வார். இதனால் த்ரிஷாவின் டுவிட்டரை அதிக எண்ணிக்கையிலான ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். தற்போது அவரை பின் தொடர்கிறவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியுள்ளது. இதனை மகிழ்ச்சி உடன் பகிர்ந்து கொண்டுள்ளார் த்ரிஷா.