Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு! – தூத்துக்குடி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

May 18, 2018
in News, Politics, World
0
ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு! – தூத்துக்குடி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரிய வழக்கில், ஸ்டெர்லைட் ஆலைக்குப் பாதுகாப்பு அளித்திட தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 90 நாள்களுக்கும் மேலாக குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டியாபுரம் உள்ளிட்ட 21 கிராம மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஆலை இயக்கப்படுவதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புதுப்பித்தல் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஆலையின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆலையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த மற்றும் நிரந்தர ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் ஆலையின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பின், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வாகனத்தில் சென்ற போது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக் குழுவினர் வாகனங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இயந்திரங்கள், ஆலையில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு அளித்திடக்கோரி ஸ்டெர்லைட் நிறுனத்தின் பொது மேலாளர் சத்தியப்பிரியா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், “எங்கள் நிறுவனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் போராடி வருகின்றனர். ஆலையின் முன்பகுதியில் கூட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த இரண்டரை மாதத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.இதுகுறித்து, சிப்காட் மற்றும் தெற்கு காவல்நிலைய போலீஸார் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர். கடந்த ஏப்ரல் 26 ம் தேதி ஆலை கேட் முன்பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. ஆலையில் திரவ ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உள்ளிட்ட பல்வேறு வகையான ரசாயனப் பொருள்கள் உள்ளன. போராட்டங்களால் ஆலை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வரும் மே-22ம் தேதி பெரியளவில் ஆலை முன்பு போராட்டம் நடத்தப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதில், சிலர் கலவரத்தை ஏற்படுத்தவும் முயற்சி செய்கின்றனர். எனவே, ஆலை வளாகத்திலிருந்து 1 கி.மீ., தூரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கவும், ஆலை வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பை அதிகரித்திடவும் போராட்டம் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சூழ்நிலைக்குத் தகுந்தபடியும் சட்டம் ஒழுங்கு பாதிக்காத படியும் வரும் 21ம் தேதிக்குள் ஆட்சியர் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஆலையைச் சுற்றி உள்ள பகுதிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பு அளித்திட தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உடனடியாக, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

Previous Post

ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு – விழுப்புரத்தில் திமுகவினர் 500 பேர் கைது!

Next Post

பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

Next Post

பா.ஜ.க-வுக்கு எதிராகக் களமிறங்கிய காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures