மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் உருவத்தை தனது மார்புப் பகுதியில் பச்சை குத்தியிருக்கும் ‘புரட்சித் தளபதி’ விஷால் நடிப்பில் தயாராகிவரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
இயக்குநரும் நடிகருமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகிவரும் பான் இந்திய திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’.
இதில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, தெலுங்கு நடிகர் சுனில், நிழல்கள் ரவி, நடிகை அபிநயா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துவரும் இந்த திரைப்படத்துக்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எக்ஷன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை மினி ஸ்டூடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் வினோத் பிரம்மாண்டமான பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.
அத்துடன் இந்த திரைப்படத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, சுனில் ஆகிய மூன்று நடிகர்களின் கதாபாத்திர தோற்றமும் போஸ்டராக வெளியிடப்பட்டிருக்கிறது.
‘லத்தி’ திரைப்படம் வணிக ரீதியாக எதிர்பார்த்த வெற்றியை அளிக்காததால் விஷாலுக்கு நெருக்கடி அதிகரித்திருப்பதாகவும், கட்டாய வெற்றியை வழங்க வேண்டிய அழுத்தத்தில் இருப்பதாகவும் திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.